- Advertisement -
Homeவிளையாட்டுபவுல்டு ஆன தோனி, ஆனாலும் அவுட் இல்லை. நல்லவேளை தோனியின் ஆட்டத்தை பாத்துட்டோம் என உறசாகப்பட்ட...

பவுல்டு ஆன தோனி, ஆனாலும் அவுட் இல்லை. நல்லவேளை தோனியின் ஆட்டத்தை பாத்துட்டோம் என உறசாகப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement-

ஐபிஎல் 16 ஆவது சீசனின் 61 ஆவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. சேப்பாக்கத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டி என்பதால் சி.எஸ்.கே.வின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தார்கள். அதிலும் குறிப்பாக கேப்டன் தோனியின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருந்தார்கள்.

டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜும், கானேவேயும் அதிரடியான தொடக்கத்தோடு ஆரம்பித்தனர். ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நான்காவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி, கெய்க்வாட்டை வெளியேற்றினார்.

அதன் பின்னர் சீரான இடைவெளிகளில் ரஹானே, கான்வே மற்றும் மொயின் அலி என அடுத்தடுத்து வெளியேற, ரன்ரேட் குறைந்துகொண்டே சென்றது. ஷிவம் துபேவும், ஜடேஜாவும் நிலைத்து நின்று விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரசிகர்கள் யாராவது அவுட் ஆகி தோனி விளையாட வரமாட்டாரா என கத்த ஆரம்பித்தனர். அதற்கேற்றார் போல இறுதி ஓவரின் 4 ஆவது பந்தில் ஜடேஜா கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

2 பந்துகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் களத்துக்கு வந்தார் தோனி. உற்சாகமாக அவரை வரவேற்றனர் ரசிகர்கள். அவர் முதல் பந்தை எதிர்கொள்ள அது வைட் யார்க்கராக சென்றதால் மிஸ் செய்தார். ஆனால் அந்த பந்து நோபால் என அறிவிக்கப்பட்டு ப்ரீஹிட் ஆனது. அதனால் அந்த பந்தில் சிக்ஸர் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement-

ஆனால் தோனி, அந்த பந்தில் பவுல்டு ஆனார். ப்ரீஹிட் என்பதால் அது விக்கெட்டில் சேரவில்லை. இன்னிங்ஸின் கடைசி பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. தோனியின் சிக்ஸர்களைப் பார்க்காவிட்டாலும், அவரின் இன்னிங்ஸைப் பார்த்த சந்தோஷத்தோடு ரசிகர்கள் அமைதியாகினர்.

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அபாரமான அரைசதத்தில் 19 ஆவது ஓவரில் எளிதில் வெற்றி பெற்றது.

சற்று முன்