- Advertisement -
Homeவிளையாட்டுசிஎஸ்கே அணியில தோனி என்ன தான் கிங்கா இருந்தாலும் அவரால TNPL-ல விளையாட முடியாது. ஏன்...

சிஎஸ்கே அணியில தோனி என்ன தான் கிங்கா இருந்தாலும் அவரால TNPL-ல விளையாட முடியாது. ஏன் தெரியுமா?

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2019 ஆம் ஆண்டு முதல் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனாலும் அவருக்கான ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணியை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 முறை கோப்பையை வென்ற இரண்டாவது வீரர் என்ற ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

தற்போது 41 வயதாகும் தோனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற சந்தேகம் உள்ளது. இந்த ஆண்டே அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குக் காரணம் அவருக்கு முழங்கால் வலி பிரச்சனை உள்ளது. அதற்காக அவர் இப்போது அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இப்போது ஓய்வில் இருக்கும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் 7 ஆவது TNPL தொடரில் விளையாட வேண்டும் என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் தோனியே நினைத்தாலும், அவரால் இந்த தொடரில் விளையாட முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கு காரணம் மிக எளிமையானதுதான்.

- Advertisement-

ஏனென்றால் தோனி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் விளையாடும் வீரர் இல்லை. அவர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் கீழ் விளையாடும் வீரர் என்பதால் TNPL தொடரில் விளையாட முடியாது. 2018 ஆம் ஆண்டு TNPL தொடர் ஆரம்பிக்கப்பட்ட போதே விதியாக தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் விளையாடும் வீரர்கள் மட்டுமே இந்த தொடரில் விளையாட முடியும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சில வீரர்கள் பிற மாநில கிரிக்கெட் சங்கத்தில் இருந்து வெளியேறி தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தில் இணைந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: 20 வயசுதான். ஆனால் ஆட்டமோ அதிரடி. 58 பந்துகளில் சதம். யார் இந்த அஜிதேஷ் குருசாமி? சாய் சுதர்சனையே மிஞ்சிட்டாரே

ஆனால் ஒரு சில ரசிகர்களோ சர்வதேச போட்டிகளில் எவ்வளவோ முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்த தோனி, இளம் வீரர்களின் திறமையை கண்டெடுக்க உருவாக்கப்பட்ட இந்த தொடரில் ஏன் விளையாட வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படி அவர் விளையாடினால் தேவையில்லாமல் ஒரு இளைஞரின் இடத்தை தட்டிப் பறித்ததாகதான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்