தோனியின் ஓய்வு குறித்து சி.எஸ்.கே அணிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறதா? தோனியால் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாட முடியும் – சி.எஸ்.கே பேட்டிங் கோச் கருத்து

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரோடு சர்வதேகக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகினாலும், ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது 41 வயதாகும் தோனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது தோனி இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வை அறிவிப்பாரா இல்லையா என்பதுதான்.

- Advertisement -

பல ரசிகர்கள் இதுதான் தோனியின் கடைசி சீசன் என்று நினைத்துக் கொண்டு சிஎஸ்கே போட்டிகள் எங்கு நடந்தாலும் தோனிக்காக மஞ்சள் ஆடை அணிந்து தங்கள் ஆதரவை சிஎஸ்கேவுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக சில சீசன்கள் விளையாடியவரும், தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருக்கும் மைக்கேல் ஹஸ்ஸி, தோனி ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது பற்றி பேசியுள்ளார்.

அதில் “தோனியின் ஓய்வு பற்றி அணிக்குள் யாருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரின் கடைசி சீசன் இதுதானா என்பது யாருக்கும் தெரியாது. அவர் இப்போதும் சிறப்பாக விளையாடி சிக்ஸர்கள் விளாசுகிறார். இப்போதும் அணிக்கு பேட்டிங்கில் பங்களிப்பு செய்கிறார்.

இதையும் படிக்கலாமே:
சி.எஸ்.கே போட்டியின் நடுவே மலர்ந்த காதல். என் ஆள கண்டு பிடிச்சி தாங்க என கோரிக்கை வைத்த பெண்

- Advertisement -

அவர் தொடர்ந்து விளையாட நினைத்தால் இன்னும் 5 ஆண்டுகள் கூட விளையாடலாம். அவரின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போதைக்கு தோனியின் ஓய்வு பற்றி தெரிந்த ஒரே மனிதன் தோனி மட்டும்தான்.” எனக் கூறியுள்ளார். இதனால் தோனி ஓய்வு குறித்த குழப்பங்கள் ரசிகர்களுக்கு இன்னமும் நீடித்து வருகின்றன.

- Advertisement -

சற்று முன்