தோனி சிக்ஸ் அடித்தபோது ரசிகர்கள் கொண்டாட்டம் ஒரு புறம் இருக்க, அவரது மகள் அதை கொண்டாடி தீர்க்கும் வீடியோ வைரல்

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையேயான 55-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் சென்னை அணியின் கேப்டன் தல தோனி தனது சிக்ஸ் ஹிட்டிங் பவரை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் அவர் ஆடிய ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் அனைவருமே மைதானத்தில் ஆர்ப்பரித்தனர்.

குறிப்பாக போட்டியின் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி மைதானத்தில் இருந்த ரசிகர்களை அதிர வைத்தார். நேற்று அவர் விளையாடிய விதம் சென்னையின் ஸ்கோரை அதிகப்படுத்தியதுடன் வெற்றி வாய்ப்பையும் அதிகரித்தது என்றே கூறலாம். அவர் அடித்த சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்த வேளையில் தோனியின் மனைவி சாக்சி தோனி மற்றும் அவரது மகள் ஸீவா தோனி ஆகியோர் கொண்டாடியதையும் நம்மால் பார்க்க முடிந்தது.

- Advertisement -

மேலும் தோனி அடித்த சிக்ஸர்களை கண்டு அவரது மகள் வெளிப்படுத்திய கொண்டாட்டமானது இணையத்தில் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் போட்டியின் 19-வது ஓவரை வீசிய கலீல் அகமதுக்கு எதிராக இரண்டு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி என தோனி 21 ரன்களை சேர்க்க அந்த ஓவரே சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய திருப்புமுனையாக மாறியது.

- Advertisement -

ஏனெனில் கடைசி ஓவரில் தோனி ஆட்டமிழந்து இருந்தாலும் அவர் இந்த போட்டியில் 9 பந்துகளில் இரண்டு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் அடித்தது இந்த மைதானத்தில் சென்னை அணியை நல்ல ரன்குவிப்பிற்கு அழைத்துச் சென்றது. பின்னர் இறுதியில் சென்னை அணி 167 ரன்களுக்கு தங்களது ஸ்கோரை முடித்துக்கொள்ள தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியானது 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி 140 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதியில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோனி அடித்த சிக்சர்கள் குறித்த வீடியோவும், அதனை அவரது மனைவி சாக்ஷி தோனி மற்றும் மகள் ஸீவா தோனி கொண்டாடிய வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் சீசனானது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் இந்தியா முழுவதுமே ரசிகர்களின் கூட்டம் தோனிக்காக குவிந்து கொண்டிருக்க நமது கோட்டையாகிய சென்னை சேப்பாக்கத்தை நேற்று ரசிகர்கள் தங்களது ஆதரவினால் அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்