ஆஸ்கர் புகழ் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிக்கு மைதானத்தில் வைத்து பரிசினை வழங்கிய தல தோனி – வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் பரிசளிப்பு விழாவின் போது “தி எலிபென்ட் விஸ்பரரஸ்” என்கிற குறும்படத்தில் நடித்து விருதினை வென்ற பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் உலகம் முழுவதும் புகழ் பெற்றனர். அவர்கள் நடித்த அந்த குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்த வேளையில் தமிழ்நாடு முழுவதுமே அந்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

அதோடு தமிழக முதல்வர் தரப்பிலிருந்தும் அவர்களுக்கு பரிசு தொகை அளிக்கப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வரும் வசித்து வரும் பொம்மன் பெள்ளி தம்பதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யானையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த தம்பதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “தி எலிபென்ட் விஸ்பரரஸ்” படம் யானைகளை எவ்வாறு பராமரிப்பது என்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த தம்பதியினர் ஆஸ்கார் விருதினை வென்றிருந்த வேளையில் அவர்களுக்கு அனைவரது மத்தியிலும் பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில் இந்த தம்பதியினர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனியை சந்தித்தனர். அப்போது அவர்களுடன் அந்த ஆவண படத்தை இயக்கிய இயக்குனரும் உடன் இருந்தார். இந்த தம்பதியினரை சிரித்த முகத்துடன் வரவேற்ற தோனி அவர்களுக்கு நினைவு பரிசாக சிஎஸ்கே ஜெர்சியை வழங்கினார்.

- Advertisement -

தோனி பரிசாக வழங்கிய அந்த ஜெர்சியில் 7 என்ற எண் பொறிக்கப்பட்டு அதற்கு கீழ் அவர்களது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த ஜெர்சியினை தோனி அவரது கைகளாலே அந்த தம்பதிக்கு கொடுத்து மகிழ்ந்தார். இதுகுறித்தான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்