நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த நிலையில் அந்த போட்டியில் சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் கடைசி கட்டத்தில் இறங்கி 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த தோனியின் இன்னிங்ஸ் அதிகளவில் பேசப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சி எஸ் கே கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. அதோடு புள்ளி பட்டியல் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட அந்த இரண்டாவது இடத்தை தக்க வைக்கும் என்பதனால் இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 140 ரன்கள் மட்டுமே குவிக்க 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் டெல்லி இன்னிங்ஸ் முடிந்ததும் அப்போது களத்தில் இருந்த டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்விடம் கைகொடுக்க வந்த தோனி, அவரின் தலைமேல் பாசமாக கைவைத்து அன்பை வெளிப்படுத்தினார். குல்தீப் யாதவ், தோனியின் கேப்டனாக இருக்கும் போது அணிக்குள் தன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர். அதனால் அவரின் வளர்ச்சியில் தோனியின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
Super show with the ball from @ChennaiIPL! 👏 👏
The @msdhoni-led unit beat #DC by 2⃣7⃣ runs in Chennai to seal their 7⃣th win of the season! 👌 👌
Scorecard ▶️ https://t.co/soUtpXQjCX#TATAIPL | #CSKvDC pic.twitter.com/SnF0uo2uu4
— IndianPremierLeague (@IPL) May 10, 2023
ஆனால் களத்தில் ஒருமுறை தோனிக்கும், குல்தீப் யாதவ்வுக்கும் இடையே ஒரு சர்ச்சையான சம்பவம் நடந்தது. குல்தீப் பந்து வீசும் போது தோனியிடம் பீல்டிங் மாற்றம் கேட்டுக்கொண்டே இருந்தார். அப்போது தோனி “இப்போது பந்தை வீசுகிறாயா இல்லை நான் உன்னை மாற்றவா?” எனக் கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக அப்போது பரவியது. இதனால் தோனிக்கும் குல்தீப்புக்கும் நல்ல உறவு இல்லை என்ற கிசுகிசுக்கள் கூட எழுந்தன. இந்நிலையில் இப்போது இந்த வீடியோ அந்த கிசுகிசுக்களை இல்லாமல் ஆக்கியுள்ளது.