- Advertisement -
Homeவிளையாட்டுடைம் ட்ரேவல் உண்மைதானா? 2040-ல் தோனி சி.எஸ்.கே ஜெர்சியோடு ஸ்டேடியத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்த்தால் எப்படி...

டைம் ட்ரேவல் உண்மைதானா? 2040-ல் தோனி சி.எஸ்.கே ஜெர்சியோடு ஸ்டேடியத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போன்று காட்சியளித்த ரசிகர்

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் சிஎஸ்கே அணி இந்தியாவில் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அவரை நேரில் காண வரும் ரசிகர்களின் கூட்டமானது நாளுக்கு நாள் லட்சக்கணக்கை தொட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கேப்டன் தோனி தொடர்ச்சியாக ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.

மேலும் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் அவர் இன்றளவும் தனது மின்னல் வேக ஸ்டம்பிங், பவர் ஹிட்டிங் மற்றும் சிறப்பான கேப்டன்சி என அனைத்திலும் அசத்தி வருவதால் ரசிகர்கள் மத்தியில் குறைவில்லா புகழோடு பயணித்து வருகிறார். இந்நிலையில் மைதானத்தில் தோனி போன்ற வயதான தோற்றத்தில் இருந்த ஒரு ரசிகர் குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்துள்ளது.

அதன்படி இந்த ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போது அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் வயதான தோற்றம் உடைய ஒருவர் பார்ப்பதற்கு தோனி போன்று இருக்கிறார். அவரது இந்த வீடியோ வெளியாகி தற்போது இணையவாசிகளின் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறி உள்ளது.

மேலும் அந்த வீடியோவினை பகிர்ந்த ரசிகர் ஒருவர் : “டைம் டிராவல் என்பது உண்மைதானோ? ஏனெனில் 2040-ஆம் ஆண்டு தோனி எவ்வாறு இருப்பாரோ அதே போன்று வயது முதிர்ந்த தோற்றத்துடன் தோனியை போன்ற அச்சசலாக இந்த ரசிகர் இருக்கிறார் என வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் நபர் இன்னும் 15 ஆண்டுகள் கழித்து தோனி எவ்வாறு இருப்பாரோ அதே போன்று அச்சசலாக இருப்பதால் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பகிரப்படும் வீடியோவாக மாறி உள்ளது.

- Advertisement-

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் வேளையில் அவர் சென்னை அணிக்காக ஒரு கோப்பையை வென்று கொடுத்து மேலும் ஒரு ஆண்டு விளையாடுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்