கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் படுமோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு வந்து இறுதிப் போட்டிவரை வந்துள்ளது. அதே சமயம் இன்று நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நேற்று நடக்க இருந்த இறுதி போட்டி மழை காரணமாக இன்று ரிஸர்வ் நாளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்படி மழையால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைபட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஏனென்றால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் சென்னை அணி பற்றி பேசியுள்ள வாசிம் ஜாஃபர் இப்படி ஒரு அணியை வைத்துக் கொண்டு தோனி ப்ளே ஆஃப் வரை சிஎஸ்கேவை அழைத்து வந்ததே பெரிய விஷயம் எனக் கூறியுள்ளார். இதற்காக தோனியின் மேஜிக்கை அவர் பாராட்டியுள்ளார். இறுதிப் போட்டிக்கு முன்னதாகப் பேசிய ஜாஃபர், சீசனின் தொடக்கத்தில், புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியாக சிஎஸ்கே தோற்றமளிக்கவில்லை, ஆனால் அவர்களின் கேப்டன் தோனி நம்ப வைக்க முடியாத அளவிற்கு அந்த இடத்தை அடைய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார் எனக் கூறியுள்ளார்.
மேலும் தோனி பற்றி அவர் கூறுகையில் “அவரது திட்டமிடல் எளிமையானது. அவர்கள் தரப்பில் அதிக மாற்றங்களை நாம் காணவில்லை. அணியை ப்ளே ஆஃப்க்கு அழைத்து வந்ததற்கு முழு கிரெடிட் நாம் தோனிக்குதான் கொடுக்க வேண்டும். உண்மையைச் சொல்வதென்றால், சிஎஸ்கே பைனலில் இடம்பெறும் ஒரு அணியாகவே தோற்றமளிக்கவில்லை.” என்று ஜாஃபர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “ஆரம்பத்தில், அவர்களின் பந்துவீச்சாளர்கள் சென்னைக்கு வெளியே உள்ள மைதானங்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறினார்கள். ஆனாலும் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை சிஎஸ்கே பிடித்தது என்றால் அதுதான் எம்எஸ் தோனியின் மேஜிக்.
இதையும் படிக்கலாமே: ரோகித் சர்மாலாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். அதுக்கு அப்பறம் முழுசா பாண்டியா ராஜ்ஜியம் தான் – அடித்து செல்லும் மைக்கேல் வாஹன்
தோனி தனது அனுபவமற்ற பந்துவீச்சாளர்களான துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீஷா பதிரனா போன்றவர்களை சிறப்பாகப் பயன்படுத்தியது உண்மையில் பாராட்டுக்குரியது, மேலும் முழங்காலில் காயம் இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து ஒரு ஃபினிஷராக விளையாடி வருகிறார், கடைசி சில ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்து CSK ரசிகர்களுக்கு சிறிய கேமியோக்களை கொடுத்து வருகிறார்.” என தோனியை பாராட்டியுள்ளார்.