ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்த தோனி. சேப்பாக்கம் மைதான ஊழியர்களுக்கு அவர் கொடுத்த அன்பு பரிசு. உச்சகட்ட மகிழ்ச்சியில் ஊழியர்கள்.

- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த மைதானங்களில் ஒன்று சென்னை சேப்பாக்கம் மைதானம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்கும் சாதகமான அம்சங்கள் இந்த மைதானத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.  அதனால் அணிகள் தங்கள் திறமைகளை சரியாக வெளிக்காட்டினால் வெற்றி பெறலாம்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இங்கே ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை. அதற்குக் காரணம் இங்கு திறக்கப்பட்ட புதிய கேலரிகளுக்கு தேவையான அனுமதி பெறவில்லை என்பதால்தான். ஆனால் அதன் பிறகு கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்காத காரணத்தால் சென்னையிலும் போட்டிகள் நடக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சேப்பாக்கத்தில் நடந்த நிலையில் சென்னை அணிக்கு பேராதரவு கிடைத்தது. ரசிகர்கள் அனைத்து போட்டிகளையும் காண மைதானத்தில் குழுமினர். போட்டி நடக்கும் நாட்களில் அந்த பகுதிகளில் ட்ராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு கூட்டம் இருந்தது என்றால் நாம் ரசிகர்களின் ஆர்வத்தைப் பார்த்துக் கொள்ளலாம்.

லீக் போட்டிகள் முடிந்த பிறகு ப்ளே ஆஃப் போட்டிகளில் முதல் குவாலிபையர் போட்டியும், எலிமினேட்டர் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த இரு போட்டிகளிலுமே முதலில் பேட் செய்த அணிதான் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் மைதானத்தை சிறப்பாக வடிவமைத்து போட்டிகளை விறுவிறுப்பாக நடக்க கடுமையாக உழைத்த சேப்பாக்கம் ஊழியர்கள் 20 பேரையும் சென்னை அணி சார்பாக சந்தித்து பேசியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இந்த சந்திப்பின் போது அவர்களுக்கு சிஎஸ்கே அணி சார்பாக நினைவு பரிசுகளையும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆட்டோகிராஃபும் போட்டுக் கொடுத்துள்ளார் தோனி.

தோனியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த மைதான ஊழியர்களின் அந்த தருணத்தையும் சிஎஸ்கே அணி புகைப்படமாக எடுத்து பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.  இந்த சந்திப்பில் ஒவ்வொருவரும் தோனியின் தனிப்பட்ட சந்திப்பால் பரந்த புன்னகையுடன் இருந்தார்கள். திரைக்குப் பின்னால் அயராது உழைக்கும் நபர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை தல இதன் மூலம் காட்டியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை சிஎஸ்கே அணி டிவிட்டரில் பகிர, அவை இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது.

- Advertisement -

சற்று முன்