- Advertisement -
Homeவிளையாட்டுஇது தான்யா தோனி கெத்து, எப்படி ஸ்கெட்ச் போட்டுருக்காரு பாத்திங்களா? யாரு உள்ள, யாரு வெளியனு...

இது தான்யா தோனி கெத்து, எப்படி ஸ்கெட்ச் போட்டுருக்காரு பாத்திங்களா? யாரு உள்ள, யாரு வெளியனு கண்பியூஸ் பண்ணுவோம் என சிலாய்கிக்கும் தோனி ரசிகர்கள்.

- Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நேற்று டாஸ் போட வந்த தோனி செய்த சில செயல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு சரியான முடிவாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஏனெனில் சென்னை மைதானம் போட்டி செல்ல செல்ல மிகவும் தொய்வாக மாறும் என்பதால் அதனை சரியாக கணித்த தோனி தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்த சீசனில் சென்னை மைதானத்தில் நடக்கும் ஆறாவது போட்டி இது என்பதனால் நிச்சயம் பந்து பேட்டுக்கு வராது என்பதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி கஷ்டப்படும் என்பதனாலே தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்று கூறப்படுகிறது.

அதோடு நம்மிடம் இருக்கும் சுழற்ப்பந்து வீச்சாளர்களை வைத்து அவர்களை வீழ்த்த முடியும் என்பதனாலும் தோனி இந்த ஒரு பக்காவான முடிவை எடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் அவரது முடிவை பாராட்டியுள்ளனர். அதோடு எப்போதுமே சிஎஸ்கே அணி டாஸ் போட்ட பின்னர் டீம் லிஸ்டை அறிவிக்கும்போது அம்பத்தி ராயுடுவை பிளேயிங் லெவனில் வைத்துவிட்டு ஏதோ ஒரு இந்திய பந்துவீச்சாளரை மாற்றுவார்கள்.

- Advertisement-

ஆனால் நேற்றைய போட்டியின் போது பதிரானா வெளியே அமர வைக்கப்பட்டு ராயுடு நேரடியாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இது தோனியின் மிகச் சிறந்த முடிவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்யும்போது ராயுடு பேட்டிங்க்கு கை கொடுப்பார் அதோடு பணியின் தாக்கம் இருக்குமா இல்லையா என்பது பொறுத்து எக்ஸ்ட்ரா பவுலரை தோனி களத்தில் சேர்க்க திட்டமிட்டிருந்தார்.

அதேபோன்று இந்த போட்டியில் பதிரானா இம்பேக்ட் ப்ளேயராக இரண்டாம் பாதியில் அணிக்குள் வந்தார். மேலும் டாசின் போது ஷிவம் துபே விளையாடவில்லை என்பது போல கூறிய தோனி களத்தில் இறங்கும் முன்னர் அவர் இருப்பதை பிளேயிங் லெவனில் உறுதி செய்தார். இப்படி தோனி எடுத்த பல்வேறு முடிவுகள் போட்டியின் வெற்றிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்ததால் அவரது முடிவுகளை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்