14 ஆண்டுகளில் 12 பிளே-ஆப்.. சிஎஸ்கே-விற்கு மட்டும் எப்படி இது சாத்தியமானது? அணியின் ரகசியம் தான் என்ன? தோனியின் வியக்கவைக்கும் பதில்

- Advertisement -

சிஎஸ்கே விற்கான கடைசி லீப் போட்டியில் சிஎஸ்கே டெல்லி அணியை வீழ்த்தி மெகா வெற்றியை பெற்றுள்ளது. இதில் சிஎஸ்கே அணி 223 ரன்கள் குவித்து டெல்லி அணிக்கு மிகப்பெரிய ஒரு இலக்கை நிர்ணயிக்க, டெல்லி அணியோ வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த போட்டியில் தோற்றது. இந்த போட்டியின் முடிவிற்கு பிறகு தோனியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கான பதில்களை தோனி சிறப்பாகவே கூறியுள்ளார். அது குறித்து இப்போது பார்ப்போம்.

போட்டி முடிந்த பிறகு, போஸ்ட் மேட்ச் ப்ரெசென்ட்டேஷனில் நெறியாளர் தொனியிடம், 14 ஐ.பி.எல் இல் 12 முறை பிளே-ஆப் வாய்ப்பை பெற்றது எப்படி? இதற்காக அணியும் நீங்களும் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, அதற்கு தோனி பின்வருமாறு கூறினார்.

- Advertisement -

இதற்க்கு எந்த ஒரு ரகசியமும் கிடையாது. சிறப்பான வீரர்களை முதலில் தேர்ந்தெடுத்து அவர்கள் எதில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்களோ அதற்க்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். அதோடு அவர்கள் எதில் வீக்காக இருக்கிறார்களோ அதிலும் கவனம் செலுத்த வேண்டும். அது பேட்டிங்காகவும் இருக்கலாம், பௌலிங்காகவும் இருக்கலாம்.

அதே போல சிலர் தங்களது இடத்தை பிறருக்கு விட்டுத்தர வேண்டிய சூழல் இருக்கும். டீமிற்கு எது தேவையோ அதை செய்வதன் மூலம் பிறரும் அதை பின்பற்றுவார்கள். அதே போல சி.எஸ்.கே மேனேஜ்மென்ட், சப்போர்ட் ஸ்டாப்ஸ் எங்களுக்கு தரும் ஆதரவும் எங்கள் வெற்றிக்கு பக்க பலமாக உள்ளது.

- Advertisement -

அவர்கள் எப்போதும் திரை மறைவில் இருப்பவர்கள். ஆனாலும் எங்களை எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். வருத்தப்படாதீர்கள், எப்போதும் போல சிறப்பாக செயல்பட்டுக்கொண்டே இருங்கள் என்று கூறுவார்கள். இது எல்லாமே சேர்ந்தது தான் எங்களின் வெற்றிக்கு காரணாம்.

அதே சமயம் வீரர்கள் மிக முக்கியம். அவர்கள் இன்றி அணி கிடையாதது என்று கூறியுள்ளார் தோனி. அடுத்ததாக, பிராவோ அணியில் இல்லாத போது டெத் பௌலிங் பிரச்னையை எப்படி சரி செய்தீர்கள் என்று நெறியாளர் கேட்க, அதற்கு தோனி அளித்த பதில் இதோ.

டெத் பௌலிங்கை பொறுத்தவரை தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. துஷாரை எடுத்துக்கொண்டால், முதல் போட்டியில் இருந்து இன்று வரை தனது திறமையையும் தன்னம்பியையும் அவர் வளர்ந்துகொண்டே வந்துள்ளார். அணிக்கு எது தேவையோ அதை பௌலர்கள் செய்கின்றனர். அதே போல பிரஷரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதும் முக்கியமாக இருக்கிறது.

ஒரே வீரரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கை வளர்கிறது. ஆனால் திரை மறைவில் டெத் பௌலிங் குறித்த பல்வேறு விஷயங்களை நாங்கள் பேசுகிறோம், என்னவெல்லாம் செய்தால் சரியாக இருக்கும் என்பதையும் விவாதிக்கிறோம். கடைசி ஐந்து ஓர்களை எடுத்துக் கொண்டால் பத்திரானா மிகவும் சிறப்பாகவே இருக்கிறார். அதன் காரணமாக எங்களுக்கான சிக்கல் பெரிதாகவே குறைகிறது என்று கூறியுள்ளார் தோனி.

அடுத்ததாக ஆக்ஷன் சமயத்திலேயே பிளேயர்களுக்கு எதுபோன்ற தகுதிகள் எல்லாம் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்களா? எப்படி அவர்களை செலக்ட் செய்கிறீர்கள் என்று நெறியாளர் கேட்க அதற்கு தோனி கூறிய பதில் இதோ.

தனக்காக விளையாடுவதை காட்டிலும் அணிக்காக விளையாடும் வீரர்களையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அத்தகைய வீரர்களை நாம் எளிதில் கண்டெடுத்து விட முடியாது. ஆனால் அணிக்குள் அவர்கள் வந்த பிறகு அவர்கள் அணியோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அதற்காக அவர்களின் தனித்துவத்தை இழக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல அது அணிக்கும் சரியாக இருக்காது.

இதையும் படிக்கலாமே: லக்னோ அணி செய்த பிழையால், சிஎஸ்கே-விற்கு அடித்த ஜாக்பாட். நேரடியா பைனலுக்குள் நுழையும் வாய்ப்பை பெற்ற சிஎஸ்கே

அவர்கள் அணிக்காக தங்களை மாற்றிக்கொள்ள 10 சதவீதம் முயற்சி செய்தால் அவர்களின் நலனுக்காக நாங்கள் 50% முன்னோக்கி வந்து திட்டங்களை தீட்டுகிறோம். இதுதான் எங்களின் சூட்சமமும் கூட என்று தெரிவித்துள்ளார் தோனி.

- Advertisement -

சற்று முன்