- Advertisement 3-
Homeவிளையாட்டுகண்கள் முழுக்க கண்ணீர் தேங்கியது. இது தான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். ஆனால்...

கண்கள் முழுக்க கண்ணீர் தேங்கியது. இது தான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். ஆனால் கஷ்டப்பட்டாவது நான் இதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறன். தோனி பேச்சு

- Advertisement-

ஐபிஎல் இறுதிப் போட்டி மழை, டக்வொர்த் லூயிஸ் என பல நாடகிய தருணங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபாரமான சேஸிங் இன்னிங்ஸ்க்கு பிறகு ஐந்தாவது முறையாக கோப்பை சிஎஸ்கே கையில் தவழ்ந்தது. பரபரப்பான திரில் போட்டியை ஜடேஜா முடித்த விதம் மயிர்கூச்செறியும் தருணமாக அமைந்தது.

போட்டி முடிந்ததும் பேசிய தோனி, எங்கே ஓய்வை பற்றி அறிவித்து விடுவாரோ என்ற அச்சம் இருந்த நிலையில் அதை அறிவிக்காதது ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. போட்டிக்கு பின்னர் பேசிய தோனி பல விஷயங்களைப் பற்றி பேசினார். அவரது பேச்சில் “ என்னிடம் ஓய்வைப் பற்றிய  பதிலைத் தேடுகிறீர்களா? தற்செயலாக பார்த்தால், எனது ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். ஆனால் இந்த வருஷம் எங்க போனாலும் ரசிகர்கள் என் மேல் காட்டிய அன்பும் பாசமும் என்னை நெகிழச் செய்துவிட்டது.  அதற்கு பதிலாக நன்றி என சொல்வது மிக சுலபமாக இருக்கும். ஆனால் இன்னும் 9 மாசம் உழைச்சுட்டு வந்து அடுத்த சீசன் விளையாடுவதுதான் எனக்கு கடினமான விஷயம்.

- Advertisements -

நிறைய விஷயங்கள் என் உடல்நிலையைப் பொறுத்துதான் அமையும். நான் ஓய்வு பற்றி முடிவு செய்ய 6-7 மாதங்கள் உள்ளன. இது என் தரப்பிலிருந்து ஒரு பரிசு போல இருக்கும், இது எனக்கு எளிதானது அல்ல, ஆனால் அது ஒரு பரிசு. ரசிகர்கள் தங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திய விதத்துக்கு நான் திருப்பி செய்ய வேண்டிய ஒன்று என்று நினைக்கிறேன். இது எனது தொழில் வாழ்க்கையின் கடைசிப் பகுதி என்பதால் நான் உணர்ச்சிவசப்படும் நிலையில் இருக்கிறேன். முதல் ஆட்டத்தில் நான் பேட் செய்ய  இறங்கியபோது எல்லோரும் என் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தனர். அப்போது என் கண்ணில் நீர் நிரம்பியது. இதை இன்னும் கொஞ்சம் அனுபவிக்க வேண்டும் என நினைத்தேன்.

சென்னையிலும் இதேதான் நடந்தது. அங்கு எனது கடைசி ஆட்டத்தின் போதும் என்னை நெகிழச் செய்து விட்டார்கள். ஆனால் திரும்பி வந்து என்னால் முடிந்ததை விளையாடுவது நல்லது. நான் தற்போது எப்படி இருக்கிறேனோ அதற்காகவே அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். நான் விளையாடும் கிரிக்கெட்டை, ஸ்டேடியத்தில் உள்ள அனைவரும் அப்படியே விளையாடலாம் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் அதில் மரபுவழி எதுவும் இல்லை. அதனால் மற்றவர்களை விட ரசிகர்கள் என்னுடன் தங்களை அதிகம் இணைத்துப் பார்த்துக் கொள்ள முடியும் என்று நான் உணர்கிறேன். நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை, நான் எப்படி இருக்க மாட்டேனோ அப்படி என்னை சித்தரிக்க விரும்பவில்லை. நான் அதை எளிமையாக வைத்திருக்கிறேன்.

- Advertisement-

ஒவ்வொரு கோப்பையும் சிறப்பு, ஆனால் ஐபிஎல்லின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு நெருக்கடி ஆட்டத்துக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டியதுதான்.  இன்று சரிவுகள் ஏற்பட்டன, பந்துவீச்சுத் துறை சரியாக செயல்படவில்லை, ஆனால் பேட்டிங் துறைதான் இன்று சரியாக செயல்பட்டு பவுலர்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்தது. ஒவ்வொரு தனிமனிதனும் அழுத்தத்தை வித்தியாசமாக கையாள்கின்றனர். அணியில், அஜிங்க்யாவும் இன்னும் சிலரும் அனுபவம் வாய்ந்தவர்கள், எனவே நீங்கள் அவர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: வீடியோ – சகார் விட்டாரு, ஜடேஜா விட்டாரு ஆனா தோனி விடல. கில் காலியானது இப்படி தான். என்ன ஒரு ஸ்பீட் ரியாக்சன் தல

ராயுடுவின் சிறப்பு என்னவென்றால், அவர் களத்தில் இருக்கும்போது எப்போதும் தனது 100 சதவீதத்தையும் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால், நான் ஒருபோதும் ஃபேர்பிளே விருதை வெல்ல முடியாது. அவர் எப்போதும் பங்களிக்க விரும்புகிறவர் மற்றும் அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். இந்தியா ஏ சுற்றுப்பயணத்தில் இருந்து நான் அவருடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். அவர் சுழல்பந்தையும் வேகப்பந்தையும் சமமாக விளையாடக்கூடிய வீரர். அவரின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்