சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் பைனல் போட்டி இன்று சிறப்பாக துவங்கியது. இதில் டாஸ் வென்ற தோனி முதலில் பௌலிங் செய்ய தீர்மானித்தார். அவரின் இந்த முடிவிற்கு ஏராளமான காரணங்களும் கூறப்படுகிறது. ஆனால் மிக முக்கிய காரணம் மழை கணிப்பு தான் என்று வல்லுநர்களால் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுப்மன் கில் மற்றும் சாஹா குஜராத் அணியின் ஒபனர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அவர்கள் அதிரடியாக அட துவங்கினர். கில் விக்கெட்டை எவ்வளவு சீக்கிரம் சிஎஸ்கே எடுக்கிறதோ அதுவே அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பினர்.
அதே சமயம் கில் கடந்த இரு போட்டிகளாக சதம் அடித்து அருமையான பார்மில் இருந்தார். ஆகையால் அவரது விக்கெட்டை சீகிரியாம் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி. இந்த நிலையில் போட்டியின் இரண்டாவது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீச அதில் தீபக் சகாரின் கைமேல் கேட்ச் கொடுத்தார் கில்.
ஆனால் அந்த அருமையான கேட்சை தீபக் சகார் தவறவிட்டார். அதன் விளைவாக கில்லின் அதிரடி ஆட்டம் துவங்கியது. கில்லின் கேட்சை தீபக் சகார் தவறவிட்டபோது அவர் வெறும் 1 ரன்களில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அவர் அடித்து ஆட துவங்கினார். அதன் விளைவாக 20 பந்துகளை எதிர்கொண்ட கில் 39 ரன்களை எடுத்தார். இந்த நிலையில் 7வது ஓவரை ஜடேஜா வீச அதில் அவரும் கில்லின் மிக எளிதான ஒரு ரன் அவுட்டை தவறவிட்டார். பந்து ஜடேஜாவின் கைகளில் பட்டு பறக்க அவர் கைகளை ஸ்டம்ப்பின் மீது அடித்தார். அந்த படிந்து மட்டும் ஜடேஜாவின் கைகளில் இருந்திருந்தால் கில் அவுட் ஆகி இருப்பார்.
இது போன்ற ஒரு சமயத்தில் ஜடேஜா வீசிய ஓவரில் கில் ஏறி வர அதை சரியாக கவனித்த தோனி, பின்னல் இருந்து பந்தை பிடித்து ஸ்டம்ப்பில் அடிக்க, கில் 39 ரன்களில் வெளியேறினார். அந்த ஸ்டம்ப்ஹிட்டிற்காக தோனி எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 0.1 நொடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.