- Advertisement -
Homeவிளையாட்டுநாங்கள் ஆடிய முதல் பந்திலேயே எனக்கு தெரிந்துவிட்டது எங்கள் முடிவு தவறு என்று. தோல்வி குறித்து...

நாங்கள் ஆடிய முதல் பந்திலேயே எனக்கு தெரிந்துவிட்டது எங்கள் முடிவு தவறு என்று. தோல்வி குறித்து தோனி கருத்து!

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 61 ஆவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 147 என்ற இலக்கை கொல்கத்தா அணி 19 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது சிஎஸ்கேவின் தவறாக அமைந்தது. இதைப் பற்றி தோனியே தன்னுடைய பேச்சில் தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்ததும் பேசிய அவர் “டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் போட்டியில், ​​இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்து வீசப்பட்ட தருணத்தில், அது 180 எடுத்தால் மட்டுமே வெற்றி பெறும் மைதானம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஒரு வேளை நாங்கள் முதலில் ஆடியிருந்தால் கூட 180 ரன்களை எட்டியிருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் மைதானத்தில் ஈரப்பதம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன்.

முதல் இன்னிங்ஸை இரண்டாவது இன்னிங்ஸுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முதல் இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு அதிக வாய்ப்பு இருந்தது. ஒருவேளை நாங்கள் இரண்டாவதாக பேட் செய்திருந்தாலும் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 150 ரன்களைத் துரத்துவது எங்களுக்கு கடினமானதாகவே இருந்திருக்கும். எனவே இந்த தோல்விக்கு எந்த ஒரு பேட்டரையோ அல்லது பந்து வீச்சாளர்களையோ உண்மையில் குறை சொல்ல முடியாது. அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்தனர், ஆனால் மைதானத்தின் நிலைமைகள் விளையாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஷிவம் துபேவின் பேட்டிங் பற்றி அவரிடம் நான் நிறைய பேசினேன்.   அவர் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றி டிரஸ்ஸிங் ரூமில் விவாதித்தோம். ஒவ்வொரு போட்டியிலும் அடித்த ரன்களில் திருப்தி அடையாமல் இருப்பது அவருக்கு முக்கியம். மிடில் ஓவரில் எங்களுக்காக முடிந்த அளவு ரன்களை எடுக்க அவர் முயற்சி செய்து வருகிறார். எனவே அவர் அதை இப்படியே தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

- Advertisement-

சஹார் பந்தை நன்கு ஸ்விங் செய்பவர் மற்றும் கிரிக்கெட்டைப் பற்றி நன்கு அறிந்தவர், பீல்டர்களை எங்கு வைத்து அதற்கேற்ப பந்துவீச வேண்டும் என அறிந்தவர்.  அவர் நிச்சயமாக ஒரு அணிக்கு ஒரு சொத்து. சில சமயங்களில் ஸ்விங் ஆகவில்லை என்றால் பந்து வீசுவதற்கான நீளம் என்ன என்பதை உணர்ந்து  அதில் வீசுபவர். தற்போது அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக உள்ளதாக உணர்கிறேன். ஏனெனில் ஸ்கோர் போர்டில் அதிக ரன்கள் இல்லாத ஆட்டங்களில் சற்று புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பந்து அவருக்கு ஸ்விங்க் ஆகவில்லை என்றால் யாருக்குமே ஸ்விங் ஆகாது.” என பேசியுள்ளார்.

சற்று முன்