நான் ஒரு மாதிரியானவன், நான் பண்றது எரிச்சலாதான் இருக்கும். களத்துக்கு வெளியவோ உள்ளேயோ, எப்படி இருந்தாலும் நான் சிஎஸ்கே காரன் தான் – தோனி பேச்சு

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் அணியாக பைனலிற்க்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் குறைவான ஸ்கோரை அடித்திருந்தாலும் சிறப்பான பவுலிங், பீல்டிங் மற்றும் தோனியின் புத்திசாலித்தனமான கேப்டன்சி ஆகியவற்றால் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி தனது ஓய்வு முடிவு, பீல்டிங் செட்டப் இப்படி பலவற்றை குறுத்தும் பேசியுள்ளார். அதில் “ ஐபிஎல் தொடர் மிகப் பெரியது. முன்பெல்லாம் 8 சிறந்த அணிகள் இருந்தன. இப்போது அது 10 சிறந்த அணிகளாக மாறியுள்ளது. அதனால் இதை மற்ற இறுதிப் போட்டி (பைனல்) போல என்னால் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனாலும் மீண்டும் பைனலிற்க்கு வந்திருப்பது சந்தோஷம்.

- Advertisement -

2 மாத கடின உழைப்பு இதில் அடங்கி உள்ளது. இந்த வெற்றிக்கு அனைவரும் பங்களித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் ஒரு அற்புதமான அணி, அவர்கள் இலக்கை நன்றாக துரத்தினார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை டாஸ்  இழந்தது ஒரு நல்ல விஷயமாக மாறிவிட்டது. (தோனியும் முதலில் பந்துவீசுவதைதான் விரும்பினார்)

ஜட்டுவுக்கு நல்ல சூழ்நிலைகள் அமைந்தால் அவர் சிறப்பாக பந்துவீசுவார். அப்போது அவரை அடிப்பது மிகவும் கடினம். அவரது பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது. மொயீனுடனான அவரது கூட்டணியை மறந்துவிடக் கூடாது. ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பலம் என்ன என்பதை அறிவதற்கான சூழலை உருவாக்க விரும்புகிறோம்.

- Advertisement -

‘தயவுசெய்து உங்கள் பந்துவீச்சை வெளிப்படுத்துங்கள்’ என்று வேகப்பந்து வீச்சாளர்களிடம் கூறுகிறோம். முடிந்தவரை அவர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். இதற்கு சப்போர்ட் ஊழியர்களான பிராவோ மற்றும் எரிக் பெரிய அளவில் உதவி புரிகின்றனர்.விக்கெட் எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப பீல்டை சரிசெய்துகொண்டே இருக்கிறேன். நான் பீல்டர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பேன். இதனால் மிகவும் எரிச்சலூட்டும் கேப்டனாகதான் இருப்பேன் என நினைக்கிறேன். ஃபீல்டர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள், ’என்னைக் கவனித்துக் கொண்டே இருங்கள்’ என்பதுதான்.

இதையும் படிக்கலாமே: பதிரனாவை பந்துவீசக் கூடாது என தடுத்த நடுவர்கள். இதனால் போட்டியையே நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட தோனி – என்ன நடந்தது? முழு விவரம்

நீங்கள் கேட்ச் மிஸ் செய்தால் கூட  என்னிடமிருந்து எந்த எதிர்வினையும் இருக்காது என்றார். (அப்போது ஓய்வு பற்றி கேட்ட போது) எனக்குத் தெரியாது – நான் முடிவு செய்ய இன்னும் 8-9 மாதங்கள் உள்ளன. இப்போதே ஏன் அந்த தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் சிஸ்கே அணியோடு இருப்பேன். ஒரு வீரராகவோ அல்லது களத்துக்கு வெளியே இருக்கும் ஒரு பணியிலோ” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்