ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், பந்து வீச்சு மோசமாக இருந்ததன் காரணமாக சில போட்டிகளில் தோல்வி அடையும் நிலை உருவாகி கடைசி கட்டத்தில் ஆர்சிபி அணியால் பத்து ரன்கள் வித்தியாசத்தில் கோட்டை விட்டு, ரன் ரேட் அடிப்படையில் அந்த அற்புதமான வாய்ப்பையும் இழந்திருந்தது.
ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி லீக்கில் நான்கு ஊர்களில் 60 ரன்கள் எடுத்தால் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால் ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் போராடி பார்த்தும் கடைசி ஓவரில் பத்து ரன்கள் சேர்க்க முடியாததால் அவர்கள் தோல்வியை தழுவி வெளியேறவும் செய்திருந்தனர்.
இதில் சிஎஸ்கேவின் கேப்டன் தோனி 13 பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ரன்களை எடுத்து கடைசி ஓவரில் அவுட்டாகி இருந்தார். ப்ளே ஆப் சென்று சென்னையில் அவருக்கு சிறந்த ஃபேர்வெல் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றமாக போனது.
மேலும் இந்த தோல்வியால் தோனி அடுத்த சீசனில் ஆடுவாரா இல்லையா என்பதே மிகப் பெரிய கேள்வியாக தற்போது மாறி உள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவர் நிச்சயம் அடுத்த சீசனில் ஆடுவார் என தெரிவித்து வரும் வேளையில் ஒரு சில பிரபலங்கள் அவருக்கு இதுதான் கடைசி சீசன் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியில் தோனியுடன் இணைந்து ஆடியவருமான மேத்யூ ஹைடன், இது பற்றி பேசுகையில், “இதுதான் தோனியின் கடைசி சீசன் என்று நான் நம்புகிறேன். ஆனால் தோனியை கடைசியாக பார்ப்பது இந்த முறையாக இருக்காது. சிஎஸ்கே அணிக்கு ஒரு ஆலோசராகவோ அல்லது அந்த சிஎஸ்கே குடும்பத்தில் ஒரு பங்காகவோ தோனி இல்லாமல் போனால் நான் நிச்சயம் ஆச்சரியப்படுவேன்.
மொத்தத்தில் சிஎஸ்கே அணியில் அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பதுடன் அந்த அணியின் தல என்ற பெருமையுடன் இருந்து வருகிறார். அவர் தனது கிரிக்கெட் அறிவையும் மிகச் சிரிப்பாக பயன்படுத்தி வருவதுடன் பந்துகளையும் மிகப்பெரிய சிக்சர்களுக்கு அனுப்பி வருகிறார். அதை பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஆனந்தமாக இருந்தாலும் பின்னணியில் அது எவ்வளவு கடினம் என்பது அந்த வீரர்களுக்கு தான் தெரியும்” என மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.