வலி இருந்தாலும் தோனி வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மாட்டார். ஏன் தெரியுமா? ஸ்ரீசாந்த் கொடுத்த விளக்கம்

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியானது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 142 ரன்களுக்குள் சுருண்டதால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய சென்னை அணி ஓரளவு டீசன்டான ஸ்கோரை எட்ட தோனியின் அதிரடியும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் 9 பந்துகளை சந்தித்த தோனி இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என அதிரடியாக 20 ரன்கள் விளாச சென்னை அணி இறுதி கட்டத்தில் நல்ல முமென்ட்டத்தை பெற்றது. இந்த போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி தனது மூட்டு பகுதியில் ஏற்கனவே உள்ள காயம் காரணமாக விக்கெட்டுகளுக்கு இடையே ரன்னிங் ஓடுவதில் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அவர் சற்று நொண்டி நொண்டி ஓடியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் என்ன வலி இருந்தாலும் தோனி பெயின் கில்லர் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் அவரது பிட்னஸ் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தோனியின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீசாந்த் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏன் ஓய்வு பெற வேண்டும். பல வீரர்கள் 42 வயது வரை விளையாடுகிறார்கள். ஆனால் தற்போது தோனிக்கு 41 வயது தான் ஆகிறது. அதுமட்டும் இன்றி இன்றளவும் தோனி மிகச்சிறந்த ஃபிட்னஸ் உடன் விளையாடும் அளவிற்கு தகுதியாகவே இருக்கிறார்.

அதோடு தற்போது வரை அவர் சிறந்த பினிஷராகவும் இருந்து வருகிறார் என்று ஸ்ரீசாந்த் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : தோனி எப்பொழுதுமே பெயின் கில்லர் மாத்திரைகளை போட்டியின் போது எடுத்துக் கொள்வதில்லை. அது குறித்து நான் அவரிடம் நிறைய முறை கேட்டிருக்கிறேன். ஆனால் தோனி அதற்கு கூறும் பதில் யாதெனில் : நான் எப்போதும் வலியோடு இருப்பதை களத்தில் காண்பிக்க விருப்பப்படுவதில்லை.

- Advertisement -

கோப்பையை வென்று சிஎஸ்கே அணிக்காக வழங்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம் என்று தோனி கூறுவார் என ஸ்ரீசாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய தோனி கூறுகையில் : என்னுடைய வேலை பின் வரிசையில் களமிறங்கி அடிப்பது தான். என்னை அதிகமாக ஓட வைக்க வேண்டாம் பெரிய பெரிய பவுண்டரிகளை அடிப்பதற்கே நான் பயிற்சி எடுத்து வருகிறேன் அதுதான் என்னுடைய வேலை நான் அதை சரியாக செய்து வருகிறேன் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்