- Advertisement -
Homeவிளையாட்டுதோனி ஒருத்தர் தான்.. என்னோட பிளானே.. கம்பேர் பண்ண கவாஸ்கருக்கு பதில் சொன்ன ஜூரேல்..

தோனி ஒருத்தர் தான்.. என்னோட பிளானே.. கம்பேர் பண்ண கவாஸ்கருக்கு பதில் சொன்ன ஜூரேல்..

- Advertisement-

இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு வருங்கால தூண்களான ஏராளமான வீரர்கள் கிடைத்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.

சீனியர் வீரர்கள் பலர் இந்த தொடரில் இடம்பெறாமல் போனது இந்திய அணிக்கான வாய்ப்பை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் பலருக்கு ஒரு கனவை திறந்து விடும் கதவாகவும் இந்த விஷயம் இருந்தது. அப்படி தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும் சில இளம் வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்தி இனிவரும் தொடர்களில் அவர்களின் தேவை இருக்கும் என்பதையும் உறுதி செய்து விட்டு சென்றுள்ளனர்.

ஏற்கனவே அறிமுகமாகி இருந்த ஜெய்ஸ்வால், இந்த தொடரில் தனது ஃபார்மை நிரூபித்து பல சாதனைகளையும் சொந்தமாக்கி இருந்தார். இதேபோல துருவ் ஜூரேல், சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் என முதல் தர போட்டிகளில் பட்டையை கிளப்பிய இளைஞர்கள் பலர் இந்த தொடரில் அறிமுகமாகி உள்ளூர் போட்டிகளில் என்ன செய்தார்களோ அதை அப்படியே பலம் பொருந்திய இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் செய்து அசத்தினர்.

அதிலும் குறிப்பாக இளம் வீரர் துருவ் ஜூரேலின் ஆட்டம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. முதல் டெஸ்டில் 46 ரன்கள் எடுத்திருந்த ஜூரேல் இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் சேர்த்து தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். இவர் பேட்டிங் மட்டுமில்லாமல் கீப்பிங்கிலும் மிக சிறப்பான வீரராக இருந்து வருவதுடன் ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் இல்லாத குறையை தனியாளாக தீர்க்கவும் செய்திருந்தார்.

- Advertisement-

முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியை போலவே கீப்பிங் நிற்கும் போது பந்து வீச்சாளர்களுக்கு சரியான ஆலோசனை கொடுத்து விக்கெட்டுகள் எடுப்பது, சரியான நேரத்தில் ஸ்டம்பிங் செய்வது என பல துல்லியமான குணங்களுடன் வலம் வருகிறார் ஜூரேல். ஒரு சில போட்டிகளிலேயே பல சர்வதேச வீரர்களின் திறனை வெளிப்படுத்தியதால் பலரும் அவரை தோனியிடனும் ஒப்பிட்டு வந்தனர். இந்தியாவின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூட அடுத்த தோனியும் ஜுரேல் தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தன்னை புகழ்ந்து கவாஸ்கர் சொன்ன கருத்திற்கு பதில் சொல்லியுள்ளார் ஜூரேல். “என்னை தோனியுடன் ஒப்பிட்டு கருத்து சொன்னதற்கு நன்றி கவாஸ்கர் சார். ஆனால் என்னுடைய தனிப்பட்ட ரீதியில் நான் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் யாராலும் இனிமேல் தோனியை போல மாற முடியாது. இங்கே ஒரே ஒரு தோனி. தான் இதற்கு முன்பும் சரி, இனி வருங்காலத்திலும் அப்படித்தான் இருக்கப் போகிறது.

என்னைப் பொறுத்தவரையில் நான் துருவ் ஜுரேலாகவே இருக்க விரும்புகிறேன். நான் என்ன செய்தாலும் நான் என்ன செய்ய விரும்பினாலும் அது துருவ் ஜூரேலாகவே செய்ய விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். தோனியின் மிகப்பெரிய ரசிகரான துருவ் ஜூரேல், ஐபிஎல் தொடரில் அவரை சந்தித்தது மிகப்பெரிய கனவு என்றும் கூறி இருந்தார்.

சற்று முன்