- Advertisement -
Homeவிளையாட்டுசவுத் ஆப்பிரிக்கா ஜெயிக்கணும்னு விரும்புனேன், ஆனா.. சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய துருவ் ஜூரேல் காரணம்..

சவுத் ஆப்பிரிக்கா ஜெயிக்கணும்னு விரும்புனேன், ஆனா.. சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய துருவ் ஜூரேல் காரணம்..

- Advertisement-

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ள இளம் வீரரான துருவ் ஜூரேல், டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஜெயிக்க வேண்டும் என விரும்பியது தொடர்பான செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி 13 ஆண்டுகளுக்கு ஒரு உலக கோப்பையை சர்வதேச அரங்கில் வென்றிருந்த நிலையில் ஒட்டுமொத்த உலகமே அதனை திரும்பிப் பார்த்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைவருமே இந்த வெற்றியை தங்களின் குடும்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை போல பார்த்து கொண்டாடி வர இன்னும் கூட அந்த உற்சாகம் யார் மத்தியிலும் குறைந்தபாடில்லை.

அதுவும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறும் கட்டத்தில் இருந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கடைசி சில ஓவர்களில் மேஜிக் செய்து வெற்றியை சொந்தமாக்கி இருந்தனர். இப்படி ஒரு சூழலில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜூரேல் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் கலக்கி திரும்பி பார்க்க வைத்திருந்தவர் தான் துருவ் ஜூரேல். பல போட்டிகளில் விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்த இவருக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதனையும் கெட்டியாக பிடித்து தனது திறனை நிரூபித்திருந்த துருவ் ஜூரேலுக்கு தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் கிடைத்துள்ளது.

- Advertisement-

முதல் டி20 போட்டியில் ரன் அடிக்க தவறிய இவருக்கு அடுத்த போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னும் 3 போட்டிகள் இருப்பதால் அதில் நிச்சயம் தனது திறனை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில் தான் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி குறித்து சில கருத்துக்களை துருவ் ஜூரேல் தெரிவித்துள்ளார். “நான் இறுதி போட்டியை பார்த்து இந்திய அணிக்காக ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் சூழலில் இருந்தது. இதனால் நான் தென்னாபிரிக்க அணிக்கு ஆதரவாக கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அந்த சமயத்தில் இந்திய அணி கம்பேக் கொடுத்திருந்தது. நான் தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கும் போது இந்திய அணி உலக கோப்பையை வென்றிருந்தது. அதனை ஒரு சிறு குழந்தை போல நான் கொண்டாடி கொண்டிருந்தேன்” என மிகவும் வித்தியாசமான காரணத்தையும் தெரிவித்து அனைவரையும் அசர வைத்துள்ளார் துருவ் ஜூரேல்.

சற்று முன்