இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கடின உழைப்பின் மூலம் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த நிலைகளை எட்டி உலக அளவில் பிரபலம் பெற்று வருகின்றனர். ஆனாலும் இதில் அந்த காலம் தொடங்கி இந்த காலத்து வீரர்கள் வரை ஒரு சில வீரர்கள் மட்டும் புகழின் உச்சத்தை தொடுவது வழக்கம்.
கபில் தேவ், சச்சின் தொடங்கி, தற்போது உள்ள தோனி, கோழி வரை இந்த நிலை என்பது தொடன்கிறது கொண்டு தான் உள்ளது. இந்த தலைமுறை ரசிகர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மிகவும் பிடித்த வீரர்களாக தோனி, கோலி, ரோஹித் சர்மா போன்றோர் உள்ளனர்.
இதில் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்து பலரும் மெய் சிலிர்த்துள்ளனர். இளம் வீரர்களுக்கு இணையாக தற்போதும் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் கோலி. இளம் வீரர்களுக்கு இணையான உடல் தகுதி, வேகம் என எதற்கும் சளைத்தவர் அல்லாமல் திகழ்கிறார் கோலி.
இப்படி இருக்கையில் விராட் கோலியின் ரசிகர் ஒருவர் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு மிகச் சிறந்த ஒரு பரிசை கொடுத்துள்ளார். தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரின் அந்த பரிசை ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் விராட் கோலிக்கு 1.04 கேரட் டைமண்ட் பேட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கோலியின் வளர்ச்சியை பார்த்து அதிசயத்துள்ள அவர், கோலிக்காக எதையாவது வித்தியாசமாக செய்தே ஆகவேண்டும் என்று கருதி இந்த பேட்டை அவர் உருவாக்கி உள்ளார்.
இந்த டைமண்ட் பாட்டின் மதிப்பு 10 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த பாட்டின் அளவு 15mm, 5mm. இதை தயார் செய்ய ஒரு மாத காலங்கள் ஆகியுள்ளன. இந்த பேட் தற்போது சான்றிதழளுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பேட்டை உருவாக்கிய வல்லுனரான உத்பால் மிஸ்திரி பேசுவையில், பொதுவாக ஒரு டைமண்ட் என்பது ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை டெஸ்ட் செய்து தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் விராட் கோலிக்காக தயார் செய்யப்பட்டுள்ள அந்த வைர பேட் அப்படி அல்ல.
அந்த பேட்டை பார்த்த உடனேயே அது ஒரிஜினல் வைரம் தான் என்பதை கண்டுபிடிக்கும் அளவிற்கு அந்த வைரம் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல நாங்களும் சிறப்பான ஒரு வைரத்தை கொண்டு அந்த பேட்டை என்று கூறியுள்ளார் அந்த பேட்டை செய்த உத்பால் மிஸ்திரி.