- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலியிடம் மன்னிப்பு கேட்டாரா நவீன் உல் ஹக்? வைரலாகும் ட்வீட். உண்மை என்ன? ஒரு அலசல்

கோலியிடம் மன்னிப்பு கேட்டாரா நவீன் உல் ஹக்? வைரலாகும் ட்வீட். உண்மை என்ன? ஒரு அலசல்

- Advertisement 1-

ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் இந்த ஆண்டு லக்னோ அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணியில் விளையாடி வந்தார். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு விமர்சனத்திற்கும் ஆளானார்.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலியுடன் வார்த்தை முதலில் ஈடுபட்ட அவர் ரசிகர் மத்தியில் அதிக அளவு கேலி, கிண்டல்களையும் எதிர் கொண்டார்.

களத்தில் விராட் கோலி உடன் மோதல் பின்னர் சமூக வலைதளத்தில் விராட் கோலி டக் அவுட் ஆனதை கிண்டல் செய்தது என அவர் அவரின் செய்கைகள் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தொடர்ந்து நவீன் உல் ஹக் எங்கு விளையாடினாலும் கோலி, கோலி என்ற முழக்கமும் அவரை கிண்டல் செய்யும் விதமாக மாம்பழங்களை பதிவிடுவதும் என ரசிகர்கள் தொடர்ச்சியாக அவரை சமூக வலைதளம் மூலம் தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நவீன் உல் ஹக் விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்பது போன்ற ஒரு ட்வீட் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “ஐ எம் சாரி விராட் கோலி சார்” என்று பதிவிடப்பட்டிருந்தது. அதேபோன்று மற்றொரு ட்வீட்டில் “கோலி இஸ் பெட்டர் தன் பாபர் அசாம்” என்றும் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் விராட் கோலி ரசிகர்களிடமும் தான் மன்னிப்பு கேட்பதாக ஒரு பதிவும் வெளியாகி இருந்தது.

- Advertisement 2-

இப்படி அடுத்தடுத்த பதிவுகள் அவர் பெயருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகவே ரசிகர்களும் அதை அதிக அளவு பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த டிவிட்டர் அக்கவுண்டானது உண்மையில் நவீன் உல் ஹக்கின் அக்கவுண்ட் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி யாரோ ஒருவர் அதை உருவாக்கி. அவர் கூறுவதை போல பல டிவீட்களை போட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: தோனி ஓய்வா? இதெல்லாம் இருக்கும்போது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. பேட்டிங் வரிசை செமையா இருக்கு – பிராவோ கருத்து

ஒருவேளை அவர் கோலியின் ரசிகராக கூட இருக்கலாம். ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் மும்பைக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, தனது சொந்த மண்ணுக்கு கிளம்பும் முன் அவர் அளித்த பேட்டி ஒன்றி, கோலி என ரசிகர்கள் பலர் ஸ்டேடுயத்தில் கோஷமிடுவது தனக்கு சிறப்பாக பந்து வீச வேண்டும் என்ற ஆர்வத்தை தான் தூண்டுகிறது என்று அவர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்