மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக மிகச்சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் திலக் வர்மா. திலக் வர்மாவின் ஸ்பெஷாலிட்டியே அவரை எந்த இடத்தில் இறக்கினாலும் அதற்கேற்றார் போல தன்னை தகவமைத்து விளையாடுவதுதான்.
போன சீசன் முழுவதும் மும்பை அணி மோசமாக சொதப்ப, அதில் நிலைத்து நின்று ஆடிய ஒரே வீரராக திலக் வர்மா இருந்தார். இந்த சீசனில் காயம் காரணமாக சில போட்டிகளை இழந்தாலும் 10 போட்டிகள் விளையாடி 300 ரன்களை சேர்த்துள்ளார். இவரின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து பலரும் விரைவில் இந்திய டி 20 அணியில் திலக் வர்மா இடம்பெறலாம் எனக் கூறிவருகின்றனர்.
அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “அவர் இந்திய அணிக்கு விளையாட தகுதியாக இருக்கிறார்” என்று பாராட்டியது குறிப்பிடத்தகுந்தது. தனது ரோல் மாடல் என ரெய்னாவைக் குறிப்பிட்டு வரும் திலக் வர்மா அவரிடம் இருந்தே பாராட்டுகளைப் பெற்றது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வர்மா CL T20யின் போது சுரேஷ் ரெய்னாவை முதல் முதலாக பால் பாயாக சந்தித்தது குறித்து பேசியுள்ளார். அதில் “சுரேஷ் ரெய்னாவை முதன்முறையாக சிஎல் டி20 போட்டியில் நான் பால் பாய் ஆக இருந்தபோது சந்தித்தேன், நான் எப்போதும் அவரைப் போலவே இருக்க விரும்பினேன். அவர்தான் எனது ரோல்மாடல்” என்று வர்மா கூறியுள்ளார்.
மேலும் “கடந்த ஆண்டு நான் அவரைச் சந்தித்தபோது அவர் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். அது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. இப்போது கூட அவர் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் எனக்கு மெஸேஜ் செய்கிறார்” என நெகிழ்ந்து பேசியுள்ளார். அதே சமயம் ரோகித் சர்மாவும் என்னுடைய திறமையை நான் வளர்த்துக்கொள்ள பல பயிற்சிகளை அளித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: ஜெய்ஸ்வால்லாம் இப்போதைக்கு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு. அவருக்கு அதுக்கான தகுதி கம்மியா தான் இருக்கு. அனுபவம் இல்லாம எப்படிங்க? – தினேஷ் கார்த்திக் அதிரடி பேச்சு
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் திலக் வர்மாவை ஹர்திக் பாண்ட்யாவோடு ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். பூம்ரா மற்றும் பாண்ட்யா அடைந்த உயரங்களை திலக் வர்மாவும் அடைவார் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.