Homeகிரிக்கெட்அவர போய் கேப்டனா போட்டீங்களே, உங்களுக்கு கிரிக்கெட் பத்தி ஏதாவது தெரியுமா தெரியாதா? ஐபிஎல்-ல கோடி...

அவர போய் கேப்டனா போட்டீங்களே, உங்களுக்கு கிரிக்கெட் பத்தி ஏதாவது தெரியுமா தெரியாதா? ஐபிஎல்-ல கோடி கோடியா சம்பாதிச்சா மட்டும் போதுமா? – காரசாரமாக பேசிய வெங்சர்க்கார்

-Advertisement-

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பல திசைகளில் இருந்தும் அந்த அணிக்கு விமர்சனங்கள் வந்து கொண்டே தான் உள்ளது. அணியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ரோகித் சர்மா டாஸை வென்று அதை சரியாக பயன்படுத்தாமல் போனதே முதல் காரணமாக கூறப்படுகிறது.

அடுத்ததாக தரவரிசையில் நம்பர் ஒன் பௌலராக இருக்கும் அஸ்வினை அவர்கள் அணியில் இடம்பெறச் செய்யாமல் வெளியே நிறுத்திய போதே தோல்விக்கான படிக்கட்டை இந்திய அணி மிதிக்கத் தொடங்கிவிட்டது என்றும் பலர் கூறுகின்றனர். இப்படி இந்த போட்டியில் தோல்வியுற்றதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி டிராஃபியையும் இந்திய அணி வெல்லவில்லை என்ற ஒரு மாபெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

-Advertisement-

அதேபோல இந்திய அணி வீரர்கள் தங்கள் சொந்த நலனில் அதிகம் கவனம் செலுத்தி, அணிக்காக விளையாடுவதை தவற விடுகின்றனர் என்ற நோக்கிலும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இபப்டி அணிகுறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் தேர்வுக்குழுவை நோக்கியும் பலர் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் திலீப் வெங்சர்க்கார் இந்திய அணியின் தேர்வு குழுவில் இருக்கும் சறுக்கல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஆறு ஏழு வருடங்களாக இந்திய அணியின் தேர்வு குழுவில் யாருக்கும் தொலைநோக்குப் பார்வை இருப்பதாக தெரியவில்லை.

-Advertisement-

அதேசமயம் அவர்களுக்கு கிரிக்கெட் குறித்த அறிவோ அல்லது கிரிக்கெட்டி குறித்த புரிதலோ இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு சமயம் முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் விளையாடிய சமயத்தில் அவர்கள் ஷிகர் தவானை கேப்டனாக போட்டார்கள். இதுதான் ஒரு அணி தனது வீரர்களை மேம்படுத்தும் செய்யலாம். ஒரு கேப்டனை இப்படியா உருவாக்குவார்கள்?

அணியின் வீரர்களின் மேம்பாட்டுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எதையும் செய்வதாக எனக்கு தோன்றவில்லை. பணக்கார கிரிக்கெட் போர்டு என்று சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் பென்ட்ச்சில் இருக்கும் வீரர்களின் பலம் என்ன? ஐபிஎல் போட்டிகளை நடத்தி அதன் மூலம் கோடிகளில் சம்பாதித்து வருவது தான் உண்மையான வெற்றியா என்று அவர் பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்