- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின் இந்த மேட்ச்ல திரும்ப வருவாரா.. பாதியில் நடக்க போகும் ட்விஸ்ட்.. கொளுத்தி போட்ட தினேஷ்...

அஸ்வின் இந்த மேட்ச்ல திரும்ப வருவாரா.. பாதியில் நடக்க போகும் ட்விஸ்ட்.. கொளுத்தி போட்ட தினேஷ் கார்த்திக்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பாதியில் திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் விலகி இருந்தது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றதுடன் அதிவேகமாக இதனை எட்டிய இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனையையும் சேர்த்து படைத்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில் தான் இரண்டாவது நாள் முடிவடைந்ததற்கு பின்னால் திடீரென அஸ்வின் பாதியில் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. நடந்து கொண்டிருக்கும் போட்டியின் பாதியில் திடீரென ஒரு வீரர் விலகுவது அரிதான நிகழ்வாக பார்க்கப்படும் சூழலில் குடும்பத்தில் ஏதோ ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக அஸ்வின் விலகியதாகவும் பின்னர் தெரிய வந்தது.

இதனிடையே அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக தான் அஸ்வின் பாதியில் கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அவரது தாயார் விரைவில் நலமாகி அஸ்வினும் விரைவில் டெஸ்ட் அணியில் இணைந்து ஆட வேண்டும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த நிலையில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் டெஸ்ட் போட்டியில் ஆடுவது பற்றி சில முக்கியமான விஷயத்தை தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்டில் வர்ணனையாளராக இருந்து வரும் தினேஷ் கார்த்திக், இது பற்றி பேசுகையில், “ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டிக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வருவார். அத்துடன் எதற்காகவும் காத்திருக்காமல் நேரடியாக அவர் பந்து வீசவும் செய்வார். அப்படி ஒரு சாதகமான விஷயத்தை அஸ்வினுக்கு நடுவர்கள் கொடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதால், அவரது தாய் விரைவில் குணமடைந்தால் நிச்சயம் இந்த போட்டியின் கடைசி நாளில் கூட தினேஷ் கார்த்திக் சொன்னது போல பாதியில் அஸ்வின் அணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்