- Advertisement -
Homeவிளையாட்டுகில் இந்த தப்ப செஞ்சிட்டா.. அந்த பையனுக்கு தான் ஓப்பனிங் வாய்ப்பு.. தினேஷ் கார்த்திக் கைகாட்டிய...

கில் இந்த தப்ப செஞ்சிட்டா.. அந்த பையனுக்கு தான் ஓப்பனிங் வாய்ப்பு.. தினேஷ் கார்த்திக் கைகாட்டிய வீரர்..

- Advertisement-

இந்திய அணியை பொறுத்த வரையில் தற்போது அனைத்து இடங்களுக்கான போட்டியும் மிக அதிகமாக இருந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் பும்ரா, முகமது ஷமி, முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது என பலரும் இருக்க இதில் சில வீரர்கள் காயமடையும் போது மற்ற வீரர்களுக்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இதேபோல ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைத்து இடங்களுக்கும் போட்டிகள் தரமாக உள்ளது. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருவது தொடக்க வீரருக்கான இடம் தான்.

டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றாலும் மற்ற இரண்டு வடிவிலான போட்டிகளிலும் அவர் துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். அவருடன் சேர்ந்து கில் அல்லது ஜெய்ஸ்வால் இடம் பிடித்து ஆடிவரும் சூழலில் ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது அதிக விமர்சனத்தையும் சந்தித்திருந்தது.

இலங்கை தொடரில் துவக்க வீரராக களமிறங்கி இருந்த சுப்மன் கில்லும் பெரிய அளவில் ரன் சேர்க்க திணறி இருந்தார். இதனால் கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். ஆனால் துணை கேப்டனாக கில் இருப்பதால் அவருக்கான வாய்ப்புகள் தான் தொடர்ந்து இந்திய அணியில் கிடைத்தும் வருகிறது.

- Advertisement-

அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆட இருப்பதால் அந்த இடத்தில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைப்பதும் சந்தேகம் தான். அப்படி ஒரு சூழலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து சில கருத்துக்களை தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என ரசிகர் ஒருவர் குறிப்பிட இது பற்றி பேசிய தினேஷ் கார்த்திக், “ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக ஆடுவது சிறந்த காம்பினேஷனாக இருக்கும். ஆனால், பேக்கப் தொடக்க வீரராக இருக்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்புள்ளது.

அத்துடன் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால் ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். இதே போல, இந்திய அணியின் மிடில் ஆர்டரும் அதிக பலத்துடன் உள்ளது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி இன்னும் 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஆட உள்ளது.

இதனால், ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தான் சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்” என தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார். இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட பின்னர் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்