- Advertisement -
Homeவிளையாட்டுஅதுல எந்த தப்பும் இல்ல.. தோனி ஐபிஎல் ஆடுவதற்காக நடந்த பெரிய பிளான்.. போட்டுடைத்த தினேஷ்...

அதுல எந்த தப்பும் இல்ல.. தோனி ஐபிஎல் ஆடுவதற்காக நடந்த பெரிய பிளான்.. போட்டுடைத்த தினேஷ் கார்த்திக்..

- Advertisement-

ஐபிஎல் மெகா த்துக்கு முன்பாக எந்த அடிப்படையில் வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பிசிசி சில விதிகளை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்காக பல நாட்கள் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் காத்துக்கிடந்த நிலையில் பிசிசி அறிவித்ததுமே உடனடியாக யார் யாரை ஒவ்வொரு அணிகளும் தக்க வைப்பார்கள் என்பது குறித்து பட்டியலையும் வெளியிட தொடங்கிவிட்டனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நிச்சயம் இனி ஆரம்பமாகவுள்ள மெகா ஏலம் பட்டையை கிளப்பும் என்றே தெரிகிறது. ஆனால் அதே வேளையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை அமலில் இருந்து வந்த விதி 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.

- Advertisement -

அந்த விதி இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது, அதிக வரவேற்பையும் அதே வேளையில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளான வீரர்கள் Uncapped பிளேயர்கள் என்ற அடிப்படையில் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளலாம் என்ற விதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

ந்த விதி, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி என்ற ஒரு வீரருக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக ஒரு பக்கம் ஆதரவையும், இன்னொரு பக்கம் விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, இந்த விதி மீண்டும் சேர்க்கப்பட்டது குறித்து சில கருத்துக்களை தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார். “அனைவரும் இந்த விதியை பற்றி பேசி வருகின்றனர். ஆனால் இந்த விதி தோனி என்ற ஒருவருக்காக கொண்டு வரப்பட்டது என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

- Advertisement-

ஐபிஎல் தொடர் இன்று எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறதோ அதற்கு தோனியும் பங்கும் மிகப் பெரியது. பிசிசிஐ, ஐபிஎல் அணிகள், இத்தனை ஆண்டுகளாக இந்த தொடரில் நடைபெறும் போட்டிகள், இதில் ஆடும் வீரர்கள் என அனைத்தும் கடந்த 15 முதல் 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்றால் அதில் தோனியும் மிக பெரிய பங்கை வகித்துள்ளார் என்பது தான் உண்மை.

நீங்கள் எந்த டிவி ஒளிபரப்பாளரிடம் கேட்டாலும் அவர்கள் உங்களுக்கு பதில் சொல்லுவார்கள். தோனி நடந்து வரும் போது அவர்களின் ரேட்டிங் எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை பற்றி கூறுவார்கள். இது தான் உண்மை. தோனியை ஆட வைப்பதன் மூலம் ஐபிஎல் தொடருக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால் நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது?.

நீங்கள் விதிகளை உடைக்காமல், அதனை மாற்றாமல் அனைத்து அணிகளிடமும் தெரிவிக்கப்பட்டு அவர்களும் இந்த Uncapped வீரர் விதி நியாயமானது என தெரிவித்தால் அதை சேர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?. தோனி ஒரு ஸ்பெஷலான வீரர் தான்” என தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார்.

சற்று முன்