- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி அந்த வார்த்தை சொல்லி திட்டுவாரு.. ரோஹித்தும் நம்ப வெச்சு ஏமாத்துனார்.. பல நாள் ரகசியம்...

கோலி அந்த வார்த்தை சொல்லி திட்டுவாரு.. ரோஹித்தும் நம்ப வெச்சு ஏமாத்துனார்.. பல நாள் ரகசியம் உடைத்த தினேஷ் கார்த்திக்..

- Advertisement 1-

முன்பு எல்லாம் இந்திய அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் அல்லது ஒரு நாள் போட்டி நடைபெறும் போது வீரர்களும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபடுவார்கள். உதாரணத்திற்கு நிதானமாக ஆடிக் கொண்டிருக்கும் பேட்ஸ்மேனிடம் சென்று இதுதான் உன்னுடைய பவரா எங்கே வேகமாக எனது பந்தை அடித்து ஆடு என பந்து வீச்சாளர் கூறுவார். அவரும் ஆக்ரோஷப்பட்டு வீம்புக்காக அடிக்க நினைத்து அவுட் ஆகி விடுவார்.

இப்படி வார்த்தைகள் மூலமே எதிரணியினரை வீழ்த்தும் தந்திரம் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு சற்று அதிகமாக தான் இருக்கிறது. இப்படி இரு நாட்டு வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதை தாண்டி தற்போதைய ஐபிஎல் உள்ளிட்ட தொடரில் ஒரு நாட்டுக்குள் இருக்கும் வீரர்களுக்கு மத்தியிலும் வார்த்தை போர் நடைபெறுவதால் இந்திய அணி வீரர்களே மாறி மாறி நிறைய ஜாலியான வார்த்தை போரிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் கூட ஏராளமான இந்திய வீரர்கள் மாறி மாறி வார்த்தையை பரிமாறிக் கொண்டு, ஜாலியாகவும் அதே நேரத்தில் சீண்டும் வகையிலும் நடைபெற்றது. அப்படி இருக்கையில் ஆர்சிபி அணிக்காக ஆடிய தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா தன்னிடம் ஸ்லெட்ஜிங்ஜில் ஈடுபட்டதை பற்றி சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

“நான் எப்போதெல்லாம் பேட்டிங் செய்வதற்காக வருகிறேனோ, அப்போதெல்லாம் எதிரணியில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, ‘இப்போது லெக் ஸ்பின்னர் வந்தால் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை எடுத்து அவருக்கு நன்றி சொல்லலாம்’ என கூறுவார். நான் லெக் ஸ்பின்னர் ஓவரில் தடுமாறுவதை தான் அப்படி குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement 2-

ஆனால் அதே நேரத்தில் நான் இரண்டு ஷாட்கள் எடுத்து ரன் சேர்க்க தொடங்கி விட்டால், ‘தினேஷ் கார்த்திக் தன்னை மேம்படுத்திக் கொண்டார். அது சிறப்பாக உள்ளது’ என ஹர்திக் கூறுவார். அதே போல, அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவர் எப்போதும் வர்ணனையாளராக இருந்து நான் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளுக்காக கடினமாக உழைப்பதை குறிப்பிடுவார்.

ரோஹித் சர்மா கூட இந்த ஆண்டு உலக கோப்பை பற்றி கூறி என்னிடம் தேவையில்லாமல் பேசி நம்பிக்கையும் கொடுத்து வம்பிழுத்து சீண்டி பார்த்தார்” என தினேஷ் கார்த்திக் கூறினார். இதே போல, ஆர்சிபி அணியில் தன்னுடன் இணைந்து ஆடிய விராட் கோலியும் எதிரணியில் இருக்கும் போது அவுட் ஆகிவிட்டால் பென் ஸ்டோக்ஸ் (ஹிந்தி கெட்ட வார்த்தை) என்ற ஒரு தகாத வார்த்தையை சொல்லுவார் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்