- Advertisement -
Homeவிளையாட்டுஎன்னது, தோனிக்கு இடமில்லையா.. தினேஷ் கார்த்திக் வெளியிட்ட பட்டியல்.. கடுப்பான ரசிகர்கள்..

என்னது, தோனிக்கு இடமில்லையா.. தினேஷ் கார்த்திக் வெளியிட்ட பட்டியல்.. கடுப்பான ரசிகர்கள்..

- Advertisement-

பொதுவாக கிரிக்கெட் அரங்கில் எப்போதுமே பிரபலங்களாக இருக்கும் பலரும் தங்களின் ஆல் டைம் ஃபேவரைட் லெவன் அணியை தேர்வு செய்வது வழக்கமான ஒன்று. உதாரணத்திற்கு கடந்த 40 ஆண்டுகளில் ஆடிய வீரர்களின் அடிப்படையில் இந்திய அணியின் சிறந்த லெவன் அல்லது டி20 அணியின் சிறந்த லெவன், சர்வதேச அரங்கில் தனது சிறந்த லெவன் என ஒட்டுமொத்தமாகவோ அல்லது ஒரு அணியை மட்டுமே சார்ந்து ஃபேவரைட் வீரர்களை அறிவிப்பதை பல கிரிக்கெட் முன்னாள் வீரர்களும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் தினேஷ் கார்த்திக் அறிவித்த இந்திய அணியின் 11 பெரிய அளவில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணியின் ஆல் டைம் லெவனைத் தேர்வு செய்துள்ள தினேஷ் கார்த்திக், சில வீரர்களை இடம்பெறச் செய்யாமல் போனதுதான் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை உருவாக்கி உள்ளது.

தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சேவாக் ஆகியோரை தேர்வு செய்துள்ள தினேஷ் கார்த்திக், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இந்த காம்பினேஷன் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை தொடக்க வீரராக இடம் பெற செய்யாமல் போனதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது வீரராக ராகுல் டிராவிட்டையும் சச்சினுக்கு நான்காவது இடத்தையும் கொடுத்துள்ள தினேஷ் கார்த்திக் ஐந்தாவது இடத்தில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை தேர்வு செய்ய கடினமாக இருந்ததாக கூறும் தினேஷ் கார்த்திக், யுவராஜ் சிங் அந்த இடத்திற்கு பொருத்தமானவர் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement-

பின்னர் ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவையும், எட்டாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினையும் தேர்வு செய்துள்ளார். இதைத் தவிர சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அணில் கும்ப்ளேவை சேர்த்த தினேஷ் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் ஜாகீர் கான் ஆகியோரைத் தேர்வு செய்திருக்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக 12 th மேனாக ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்துள்ள தினேஷ் கார்த்திக், இந்த பட்டியலில் சில வீரர்கள் இடம் பெறாமல் போனதையும் குறிப்பிட்டுள்ளதுடன் கவுதம் கம்பீர் குறித்தும் பேசியிருந்தார். அதே வேளையில் தோனி, கபில் தேவ் உள்ளிட்டோரை இந்த வரிசையில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யாமல் போனது அதிக அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அனைத்து வடிவிலான போட்டிகளின் அடிப்படையில் இந்த அணியை தேர்வு செய்ததால் சில வீரர்கள் இடம்பெறாமல் போவார்கள் என்றும், அது கடினமானது என்றும் இதுவே சரியானதாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்