- Advertisement 3-
Homeவிளையாட்டுஇத கூட சரியா பாக்கமாட்டீங்களா.. தினேஷ் கார்த்திக் பேட்டிங்கால் வெடித்த சர்ச்சை.. கொந்தளித்த ராஜஸ்தான் ரசிகர்கள்..

இத கூட சரியா பாக்கமாட்டீங்களா.. தினேஷ் கார்த்திக் பேட்டிங்கால் வெடித்த சர்ச்சை.. கொந்தளித்த ராஜஸ்தான் ரசிகர்கள்..

- Advertisement 1-

இந்த ஐபிஎல் சீசன், சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் என பவுண்டரியை கொண்டே விருந்து படைத்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட விஷயம், பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை. நடப்பு ஐபிஎல் தொடரில் களத்தில் இருந்த நடுவர்கள் மட்டுமில்லாமல், டிவி ரீப்ளேவில் பல முறை திரும்ப திரும்ப பார்த்தும் மூன்றாம் நடுவர்கள் வரை எடுத்த முடிவுகள் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மைதானத்தில் இருந்து மட்டுமில்லாமல், டிவி மூலம் ஐபிஎல் போட்டிகள் பார்த்த ரசிகர்களுக்கே சில விஷயங்கள் விக்கெட் என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால், மூன்றாம் நடுவர்கள் விக்கெட் இல்லை என அறிவித்திருந்தனர். இப்படி நடுவர்கள் எடுத்த பல முடிவுகள் பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்ப, ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி இருந்த கடைசி லீக் போட்டியில் கூட அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருந்தது.

பாப் டு பிளெஸ்ஸிஸ் ரன் அவுட்டின் போது, பேட் கிரீசுக்குள் இருப்பது போல் தெரிய, 3 ஆம் நடுவர் அவுட் என அறிவித்திருந்தார். டெல்லிக்கு எதிராக சஞ்சு சாம்சன் விக்கெட், கொல்கத்தாவிற்கு எதிராக கோலியின் அவுட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆயுஷ் படோனி ரன் அவுட் என மூன்றாம் நடுவர்களின் முடிவுகளே இந்த சீசனில் அதிக எதிர்ப்பை சம்பாதித்திருந்தது.

ஐபிஎல் பிக்சிங் என இதை பலர் சொன்னாலும், உண்மையில் இந்த அளவுக்கு தான் நடுவர்களின் திறன் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. இதனிடையே, அப்படி ஒரு சம்பவம் தான் பிளே ஆப் போட்டியிலும் மீண்டும் ஒரு முறை அரங்கேறி உள்ளது. குவாலிஃபயர் 1 போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி, கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேற, எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதி இருந்தன.

- Advertisement 2-

தங்களின் கடைசி 6 லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று பிளே ஆப் வரை முன்னேறிய ஆர்சிபி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணிக்கு எதிராக ஆடியது போல இந்த முறை அவர்கள் ஆடாமல் போக, அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். அதிலும், கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் அஸ்வின் வீழ்த்தி அசத்தி இருந்தார்.

இதனையடுத்து, ராஜத் படிதர் 34 ரன்களில் அவுட்டானதும், உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ என அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் டிஆர்எஸ் எடுக்க, இதனை பரிசோதித்த 3 ஆம் நடுவர் அவுட்டில்லை என கூறினார். ஆனால், ரீப்ளேவில் பந்து பேட்டிற்கு படுவதற்கு முன்பாக கால் பேடில் பட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படங்களில் துல்லியமாக தெரியும் இதனைக் கூட 3 ஆம் நடுவரால் சரியாக பார்த்து அவுட் கொடுக்க முடியாதா என ராஜஸ்தான் ரசிகர்கள் கோபத்துடன் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சற்று முன்