- Advertisement -
Homeவிளையாட்டுஜெய்ஸ்வால்லாம் இப்போதைக்கு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு. அவருக்கு அதுக்கான தகுதி கம்மியா தான் இருக்கு....

ஜெய்ஸ்வால்லாம் இப்போதைக்கு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு. அவருக்கு அதுக்கான தகுதி கம்மியா தான் இருக்கு. அனுபவம் இல்லாம எப்படிங்க? – தினேஷ் கார்த்திக் அதிரடி பேச்சு

- Advertisement-

ஐ.பி.எல் போட்டிகள் ஒருபுறம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்க்கு அடுத்து என்ன செய்யவேண்டும், இந்திய அணியை எப்படி சிறப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் பலரது மனதிலும் எழ ஆரமித்துள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளன.

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் போட்டிகள் நடக்கும் என தெரிகிறது. இந்த ஆண்டு மொத்தமாக நடக்கும் 47 போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளன. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத நிலையில் சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை தொடரையாவது எப்படியாவது வெல்ல வேண்டு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கான அணியை சரியாகக் கட்டமைப்பதுதான் இப்போது பிசிசிஐ முன்னால் உள்ள மிகப்பெரிய பணியாக இருக்கும். இதுபற்றி பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “அணியில் முக்கியமான வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டு விலகினால், அவர்களுக்கான இடத்தில் நான் திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் ஆகியவர்களை கொண்டு வர முடிவு செய்வேன். இவர்கள்தான் இப்போது தேர்வுக்கு தகுதியானவர்கள்.” எனக் கூறியிருந்தார்.

ஆனால் டி 20 கிர்க்கெட்டில் சிறப்பாக விளையாடி போதிய ஒரு நாள் போட்டிகள் அனுபவம் இல்லாத ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை ஒரு நாள் அணியில் சேர்க்க தேவையில்லை என தினேஷ் கார்த்திக் மறுத்துப் பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் “யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒருநாள் போட்டிகளுக்கு உடனே கொண்டுவரவேண்டும் என நான் நினைக்கவில்லை.

- Advertisement-

அவர் இன்னும் அதற்கு தகுதிப் பெறவில்லை. ஏனென்றால் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக குறைவான எண்ணிக்கையிலான ஒரு நாள் சீரிஸ்களே உள்ளன. என்னைக் கேட்டால் அவரை உடனடியாக டி 20 அணியில் இடம்பெற செய்யவேண்டும் என்பேன். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணிக்கான தேர்வில் ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: குவியல் குவியலா விக்கெட்ட எடுக்கறாரு, சிக்சா விலாசறாரு. இவர் கிட்ட நீங்க ஜாக்கிரதையா இல்லாட்டி அவளோ தான். மும்பை அணிக்கு ஹர்பஜன் கொடுத்த எச்சரிக்கை

இந்த ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 ஆட்டங்களில் 163.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 625 ரன்கள் எடுத்தார். மேலும், இந்த சீசனில் அவர் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்