- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவர் பவுலிங்கே சரியில்ல.. அஸ்வினை விமர்சித்த தினேஷ் கார்த்திக்.. கொஞ்ச நேரத்திலேயே தரமான பதிலடி..

அவர் பவுலிங்கே சரியில்ல.. அஸ்வினை விமர்சித்த தினேஷ் கார்த்திக்.. கொஞ்ச நேரத்திலேயே தரமான பதிலடி..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்திய அணி ஏறக்குறைய வெற்றியை நெருங்கி விட்டது என்றே சொல்லலாம். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் தங்களின் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனாலும் கடைசி கட்டத்தில் துருவி ஜூரேலின் உதவியுடன் 307 ரன்கள் குவித்திருந்தது. ஜூரேல் 90 ரன்களும், அவருடன் பக்கபலமாக கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்த குல்தீப் யாதவ் 28 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சில் சிக்கி சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஜோ ரூட், ஒல்லி போப் உள்ளிட்ட யாருமே ரன் சேர்க்காத நிலையில், தொடக்க வீரர் சாக் கிரவ்லி மட்டும் நிலைத்து நின்று 60 ரன்கள் சேர்த்திருந்தார். மற்ற யாருமே பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால், இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

இதனால், இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாள் கடைசி 8 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், அதனை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட இந்திய அணி, ஒரு விக்கெட் கூட இழக்காமல் 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement 2-

இதனிடையே, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்து வீச்சை விமர்சித்த நிலையில், அதற்கு தக்க பதிலடியை தனது பவுலிங் திறன் மூலம் கொடுத்துள்ளார். அதாவது இந்த போட்டியின் மூன்றாவது நாளுக்கு முன்பாக பேசியிருந்த தினேஷ் கார்த்திக், அனுபவம் இல்லாத இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை விட மிகச் சிறப்பாக பந்து வீசுகின்றனர் என்றும், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜாவை பாராட்டி விட்டு அஸ்வின் பந்து வீச்சு அந்த அளவுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் போது அஸ்வின் 4 அல்லது 5 விக்கெட்டுகள் கூட எடுக்காமல் இருப்பது அவருக்கு நல்ல தொடராக இது அமையவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு நிலையில் தான் அவர் சொல்லி முடித்த கொஞ்ச நேரத்தில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்