- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலிய சொறிஞ்சு விட்டதே அவங்க தான்.. சும்மா இருந்தவரு நெருப்பா மாற காரணம்.. ரகசியம் உடைத்த...

கோலிய சொறிஞ்சு விட்டதே அவங்க தான்.. சும்மா இருந்தவரு நெருப்பா மாற காரணம்.. ரகசியம் உடைத்த தினேஷ் கார்த்திக்..

- Advertisement 1-

17 வது ஐபிஎல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் அனைத்து கிரிக்கெட் பிரபலங்களும் தங்களின் பெஸ்ட் 11 அணியை அறிவித்து வருகின்றனர். இதில் அனைத்து பிரபலங்களுமே தவறாமல் ஒருவரது பெயரை இடம்பெற செய்து வருகிறார் என்றால் அது விராட் கோலி மட்டும் தான்.

இந்த சீசனின் முதல் பாதி லீக் போட்டியில் பெங்களூர் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் அப்போதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார் கோலி. இதேபோல கடைசி கட்ட லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆர்சிபி அணி பிளே ஆப் முன்னேறிய போதும் நல்ல பேட்டிங் வெளிப்படுத்தி பங்களிப்பையும் தன்னால் முடிந்த வரைக்கும் கோலி அளித்திருந்தார். இந்த சீசனில் 741 ரன்கள் குவித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாகவும் ஆரஞ்சு கேப் வென்றுள்ளார்.

முதல் இந்திய வீரராக இந்த உயரத்தை தொட்டிருந்த நிலையில் தொடருக்கு மத்தியில் விராட் கோலியின் பேட்டிங் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. இதற்குக் காரணம் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக குறைவாக இருந்தது தான். டி20 போட்டியில் 40 பந்துகளுக்கு 50 முதல் 55 ரன்கள் வரை கோலி அடித்து வந்த சூழலில் இப்படி ஆடினால் எப்படி உலக கோப்பையை இந்த வருடம் ஜெயிக்க முடியும் என்ற கேள்விகளும் ஏழாமல் இல்லை.

பல கிரிக்கெட் பிரபலங்களும் கூட இதனை கேள்வி செய்ய, அதன் பின்னர் திடீரென விஸ்வரூபம் எடுத்த கோலி முதல் ஓவரிலேயே சிக்ஸர்களை பறக்கவிட்டு அனைத்திற்கும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஆர்சிபி அணியில் அவருடன் இணைந்து ஆடிய தினேஷ் கார்த்திக் இது பற்றி தற்போது சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement 2-

“இந்த ஆண்டில் விராட் கோலி எப்படி ஆடினார் என்பதை பற்றி ஒரு புத்தகத்தையே என்னால் வெளியிட முடியும். ஆரம்பத்தில் அவர் ஓகே ரகத்தில் தனது பேட்டிங்கை தொடங்கி இருந்தாலும் பின்னர் நன்றாக ஆடுவதற்கு சைமன் டால் உள்ளிட்ட சிலர் காரணமாக இருந்தனர். அவர்கள் தூண்டி விட்டதால் விராட் கோலி அப்படி ஆடினார். அதே போல, கோலியின் உண்மையான இன்னொரு பக்கத்தை பார்க்க பலரும் விரும்ப மாட்டார்கள்.

மேலும் எப்போதும் தன்னை விமர்சித்து வரும் கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதை தான் கோலியும் விரும்பி வருகிறார். இப்படி ஒரு உத்வேகத்துடன் செயல்படும் கோலி, ஒரு எரிமலையை போன்றவர். அவர் மிகவும் நெருப்பு போன்று இருப்பதுடன் மட்டும் இல்லாமல் யாருமே அவரது அருகில் செல்லவும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் நெருப்புக்கு அருகில் சென்றால் நீங்கள் சுட்டெரிக்கப்பட்டுவீர்கள். எப்போதுமே விமர்சனத்திற்கு எதிரான பதிலடிதான் கோலியின் ஸ்டைல்” என தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார்.

சற்று முன்