- Advertisement -
Homeவிளையாட்டுநீங்க இந்த புல்லு வெட்டுற வேலைய செஞ்சி இருந்தா இந்நேரம்.. என நக்கலாக கூறிய ரசிகர்....

நீங்க இந்த புல்லு வெட்டுற வேலைய செஞ்சி இருந்தா இந்நேரம்.. என நக்கலாக கூறிய ரசிகர். அதற்கு தினேஷ் கார்த்தி கொடுத்த ரிப்ளை தான் அல்டிமேட்ட

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. ஆஸி அணி களமிறங்கிய பேட் செய்து வருகிறது.

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என பெயர் பெற்றது. மைதானப் பராமரிப்பாளர்கள் போட்டிக்காக 6 மிமீ புல் உள்ள மைதானத்தைத் தயார் செய்துள்ளனர். அதற்கேற்றார் போல இரு அணிகளும் அதிகளவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான்கு பவுலர்களோடு விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்றுகிறார். அதை முன்னிட்டு அவர் நேற்று மைதானத்தைப் பார்வையிட்டு விக்கெட்டில் உள்ள புல்லின் உயரங்களைப் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

அதில் நேற்று விக்கெட்டில் 9 மிமீ புல் இருந்ததாகவும், இன்று 6 மிமீ புல் மட்டுமே இருப்பதாகவும் ஒப்பிட்டு இரு புகைப்படங்களை பதிவிட்டு, டாஸ் வென்றால் பேட்டிங் ஆட விரும்புவீர்களா? அல்லது பந்துவீச விரும்புவீர்களா? என கேட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பல பதில்களை சொல்லி வந்தனர்.

- Advertisement-

அதில் ஒரு குறும்புக்கார ரசிகர் தினேஷ் கார்த்திக்கை சீண்டும் விதமாக “இரவோடு இரவாக எந்திரத்தைக் கொண்டு தினேஷ் கார்த்திக் புற்களை வெட்டியிருந்தால் இந்த நேரத்தில் அவர்தான் நம்முடைய ஹீரோ. ஆடுகளம் என்ற பெயரில் என்ன ஒரு தோட்டத்தை உருவாக்கி உள்ளார்கள்” எனக் கிண்டலாக அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை ஜாலியாக எடுத்துக் கொண்ட தினேஷ் கார்த்திக் “ஏற்கனவே என்னுடைய ரெஸ்யூம் பல பணிகளால் நிரம்பியுள்ளது” என ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் வர்ணனையாளர் என இருக்கும் நிலையில் மைதானப் பராமரிப்பாளர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த டிவீட்டின் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

சற்று முன்