- Advertisement -
Homeவிளையாட்டுரிங்கு சிங், ஹர்திக் செஞ்ச கலவை அவரு.. 2 வருசமா ஒரு வாய்ப்பு கூட கொடுக்காத...

ரிங்கு சிங், ஹர்திக் செஞ்ச கலவை அவரு.. 2 வருசமா ஒரு வாய்ப்பு கூட கொடுக்காத ஆர்சிபி.. விளாசும் முன்னாள் வீரர்..

- Advertisement-

பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் என வரும் போது நிறைய திறமைகள் இருந்தாலும் கூட அதிர்ஷ்டம் இல்லாமல் போகும் பட்சத்தில் அவருக்கான வாய்ப்புகள் உடனடியாக இந்திய அணியில் கிடைத்து விடாது. இதற்கு உதாரணமாக இந்திய அணியில் இடம்பிடித்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் பாதியிலேயே நிறைய பேர் காணாமல் போயுள்ளனர்.

இதனால், அனுபவமே இல்லாத இளம் வீரர்களாக இருந்தாலும் அவர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து சர்வதேச அரங்கிற்காக தயார் செய்ய வேண்டுமென்றும் நிறைய பேர் கூறுவார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்து வரும் மகாராஜா டிராபியில் ஆடி வரும் இளம் வீரர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டோட்டா கணேஷ் சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரை போல ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வீரர்களின் திறனை அறிந்து கொள்ள நிறைய டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. அப்படி தான் தற்போது கர்நாடக மாநிலத்திலும் மகாராஜா டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில் பல இளம் வீரர்களின் ஆட்டம் கவனம் பெற்று வருகிறது.

அதில் 25 வயது ஆகும் மனோஜ் பாண்டகே என்ற இளம் வீரர் ஒரு சில போட்டிகளிலேயே தனது பேட்டிங் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். மனோஜ் பாண்டகே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இருந்த போதிலும் அவருக்கான வாய்ப்பு ஒரு போட்டியில் கூட கிடைக்கவில்லை. ஒரு வேலை அவர்கள் மனோஜ் பாண்டகேவுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட பேசப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

- Advertisement-

இதனிடையே, இது பற்றி பேசி உள்ள முன்னாள் வீரர் டோட்டா கணேஷ், “இரண்டு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மனோஜ் பாண்டகே இருந்தும் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இம்பேக்ட் பிளாயர் வீதியில் கூட அவரை களமிறக்க முயற்சி செய்யவில்லை. மிகத் துல்லியமாக பந்தை அடித்து ஆடும் மனோஜ் பாண்டகே, நிச்சயம் வேறு அணியில் தேர்வாகி அவரை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

பேட்டிங்கில் அதிரடி காட்டுவதுடன் மட்டுமில்லாமல் மீடியம் பவுலராகவும் இருக்கும் மனோஜ் பாண்டகே, நிச்சயம் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் அதனை கொண்டு சர்வதேச அணியிலும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் கலவையாக அவர் இருப்பதாகவும் பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்