- Advertisement 3-
Homeவிளையாட்டுசூரியகுமார் 4 ரன், புஜாரா 15 ரன்... மொத்தமாக கோட்டை விட்ட வெஸ்ட் சோன்.. 14வது...

சூரியகுமார் 4 ரன், புஜாரா 15 ரன்… மொத்தமாக கோட்டை விட்ட வெஸ்ட் சோன்.. 14வது முறையாக துலீப் கோப்பையை தட்டி தூக்கிய சவுத் சோன் அணி

- Advertisement 1-

2023 ஆம் ஆண்டு துலீப் கோப்பையை சவுத் ஜோன் அணி வென்று அசத்தியது. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் சோன் அணியுடன் சவுத் சோன் அணி மோதியது.

சவுத் அணியின் கேப்டனாக ஹனுமா விகாரி செயல்பட்டார். இதில் மாயங் அகர்வால், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர்,சாய் கிஷோர் போன்ற வீரர்கள் இருந்தனர். ஆனால் வெஸ்ட் சோன் அணியில் பிரித்விஷா, புஜாரா, சூரியகுமார் யாதவ் சர்பிராஸ்கான் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் இறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் வெஸ்ட் சோன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் இன்னிங்சில் விகாரி அதிகபட்சமாக 63 ரன்கள் எடுக்க, திலக் வர்மா 42 ரன்களில் வெளியேறினார்.

இதன் காரணமாக சவுத் சோன் அணி 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து வெஸ்ட் சோன் அணி தங்களது முதல் இன்னிங்க்ஸில் விளையாடியது. இதில் பிரித்வி ஷா 65 ரன்கள் எடுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா ஒன்பது ரன்களிலும் சூரியகுமார் 8 ரன்களிலும் சர்பிராஸ்கான் டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.

- Advertisement 2-

இதனால் அந்த அணி 146 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து 67 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் சவுத் சோன் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.

இதில் அதிகபட்சமாக விகாரி 42 ரன்கள் சேர்க்க, மாயங் அகர்வால் 32 ரன்களும், ரிக்கி புயி 37 ரன்களும் அடித்தனர். இதனால் அந்த அணி 230 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் சோன் அணி களம் இறங்கியது.

இதில் பிரித்விஷா 7 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டம் இழக்க சர்பிராஸ்கானும் பிரியங் பஞ்சலும் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

எனினும் முக்கிய கட்டத்தில் சர்பிராஸ்கான் 48 ரன்களில் வெளியேற பிரியங் பாஞ்சல் அதிகபட்சமாக 95 ரன்கள் சேர்த்தார். இதனால் வெஸ்ட் சோன் அணி 222 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் சவுத் சோன் அணி சாம்பியன் பட்டத்தை 14வது முறையாக கைப்பற்றியுள்ளது.

சற்று முன்