- Advertisement 3-
Homeவிளையாட்டு140 கிமீ வேகத்துல பந்துவீசற எனக்கே இந்த நிலைமையா? ரொம்ப கஷ்டம். வேதனையில் பேசி உள்ள...

140 கிமீ வேகத்துல பந்துவீசற எனக்கே இந்த நிலைமையா? ரொம்ப கஷ்டம். வேதனையில் பேசி உள்ள துஷார் தேஷ்பாண்டே

- Advertisement 1-

சிஎஸ்கே அணிக்காக தோனியால் பட்டை தீட்டப்பட்ட இளம் வீரர்களில் ஒருவர் துஷார் தேஷ்பாண்டே. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக அவர் அதிக விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அதிக ரன்களை முதல் சில போட்டிகளில் கொடுத்ததால் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

ஆனால் சிஎஸ்கே கேப்டன் தோனி, அவரை தொடர் முழுவதும் ஆதரித்து தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் பயன்படுத்தினார். இதையடுத்து அவருக்கு விரைவில் இந்திய அணி கதவுகள் திறக்கும் வாய்ப்புக் கூட இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, வரவிருக்கும் 2023 துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணியில் இடம்பெறவில்லை. வலது கை வேகப்பந்து வீச்சாளரான தேஷ்பாண்டே இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இல் சிறப்பாக பந்து வீசி நல்ல ஃபார்மில் இருந்தார்.

மேலும் எம்எஸ் தோனியின் சிஎஸ்கே படை ஐந்தாவது முறை ஐபிஎல் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் என்று சொன்னால் மிகையாகாது. இந்த தொடர் முழுவதும் பவர்ப்ளே ஓவர்களில் தேஷ்பாண்டே நல்ல வேகத்துடன் பந்துவீசினார். புதிய பந்தை ஸ்விங் செய்தார். சென்னை அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக இருந்தார்.

- Advertisement 2-

துலீப் கோப்பை தொடருக்கான வெஸ்ட் ஸோன் அணியில் தான் இடம்பெறாதது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேஷ்பாண்டே 2022-23 ரஞ்சி டிராபி சீசனில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அவரது ரசிகர்களுக்கும் இந்த முடிவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: அப்பாடா இப்பவாவது ஒரு நல்ல செய்தி வந்துச்சே. இந்திய அணிக்கு திரும்பும் பும்ரா. எப்ப தெரியுமா?

இதுபற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள தேஷ்பாண்டே “நான் சிறந்த ஃபார்மில் இருக்கிறேன், தொடர்ந்து 140 கிமீ வேகத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறேன். நான் மட்டுமல்ல, அனைவரும் என் பெயரை மேற்கு மண்டல அணியில் எதிர்பார்த்தார்கள். அணியில் இடம் பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது,” என்று தேஷ்பாண்டே கூறினார்.

சற்று முன்