அந்த டீம் மேல மட்டும் கொஞ்சம் பயம். பைனலுக்கு அவங்க வராம இருந்தா போதும் – சிஎஸ்கே பவுலிங் கோச் பிராவோ கருத்து

- Advertisement -

இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய 14 ஐபிஎல் சீசன்களில் 10 முறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் ஆளாக் சீட் போட்டு வைத்துள்ளது.

குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் அந்த அணியின் பௌலர்களை சி.எஸ்.கே பேட்ஸ்மேன் ருத்துராஜ் ஒருபுறம் பந்தாடியது இருக்க, அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லிக்கொண்டிருந்த கில்லை சி.எஸ்.கேவின் சாகர் தட்டி தூக்கினார். அதே சமயம் சி.எஸ்.கே பீல்டர்கள் பலரும் நேற்று தங்களது முழு ஈடுபாட்டை காட்டினர். இதனால் பைனலில் அடியெடுத்து வைத்துள்ள சி.எஸ்.கே இந்த முறை கோப்பையை வெல்லும் பட்சத்தில் அது சிஎஸ்கேவின் ஐந்தாவது கோப்பையாக இருக்கும்.

- Advertisement -

நேற்றைய போட்டியின் வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருவது ஒருபுறம் இருக்க, சிஎஸ்கே அணியோடு இறுதி போட்டி விளையாட எந்த அணி வரும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பவுலிங் பயிற்சியாளருமான டுவெய்ன் ப்ராவோ இந்த வெற்றி பற்றி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அவர் இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் தங்களுக்கு எதிராக வரக் கூடாது எனப் பேசியுள்ளார். அவரது பேச்சில் “மும்பை இந்தியன்ஸ் அணி மேல் எனக்கு பயம் உண்டு. அந்த அணியை நாக் அவுட் போட்டிகளில் வெல்வது அவ்வளவு எளிதல்ல. அதனால் மற்ற அணிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை.

- Advertisement -

மற்ற அணிகளை வீழ்த்துவதும் கடினம்தான். ஆனால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்துவது மிகக்கடினம்.  அதனால் இறுதிப் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் மட்டும் வரவே கூடாது. இது எனது நண்பர் பொல்லார்ட்க்கும்(மும்பை அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளர்) தெரியும்.  இறுதிப் போட்டிக்கான ரேசில் இருக்கும் 3 அணிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: உலக சாதனை படைத்த சி.எஸ்.கே குஜராத் மேட்ச். இதற்கு முன்பு கிரிக்கெட் போட்டியால் இப்படி ஒரு சாதனை நிகழவில்லை என பூரிப்பில் ரசிகர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 3 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 2 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சிஎஸ்கே அணி 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்