- Advertisement -
Homeவிளையாட்டுஎன்னது? சிஎஸ்கே-ல இருந்து ஒருத்தர மட்டும் தான் இதுல செலக்ட் பண்ணி இருக்கீங்களா? எல்லாரும் எவ்ளோ...

என்னது? சிஎஸ்கே-ல இருந்து ஒருத்தர மட்டும் தான் இதுல செலக்ட் பண்ணி இருக்கீங்களா? எல்லாரும் எவ்ளோ உழைச்சி இருக்கோம் தெரியுமா? கடுப்பாகி பதிவு போட்ட டுவெய்ன் பிரிட்டோரியஸ்

- Advertisement-

ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது சிஎஸ்கே அணி. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட கனவு அணியை கிரிக் இன்போ இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதில் ஒரே ஒரு சிஎஸ்கே வீரருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. அது ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா. கோப்பையை வென்ற ஒரு அணியில் இருந்து ஒரே ஒரு வீரரை மட்டும் தேர்வு செய்திருப்பது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக் இன்போ அணியில், கேப்டனாகவும் தொடக்க ஆட்டக்காரராகவும் பாஃப் டு பிளஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் ஒருவர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக இந்த சீசனின் ஆரஞ்ச் கேப் வின்னர் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவை இரண்டும் நியாயமான தேர்வுகளாகவே பார்க்கப்படுகின்றன.

அடுத்த மூன்று இடங்களில் மும்பை அணி பேட்ஸ்மேன்கள் மூவரை தேர்வு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் கேமரூன் க்ரீன், நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஐந்தாவது இடத்தில் திலக் வர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இவர்கள் மூவரும் மும்பை அணிக்கு கிட்டத்தட்ட இதே வரிசையில் சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

விக்கெட் கீப்பராக சன் ரைசர்ஸ் அணி வீரர் ஹென்ரிச் கிளாசன் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். இதில் தோனிக்கு இடமளிக்கப்படவில்லை.  அடுத்தடுத்த இரண்டு இடங்களில் ரிங்கு சிங் மற்று ரவிந்தர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல்-ல் விளையாடியதன் விளைவால் சொந்த நாட்டிற்காக விளையாட முடியாமல் போன ரஷித் கான் – அடடா நல்ல பௌலர் ஆச்சே என வருந்தும் ரசிகர்கள்.

பவுலர்கள் வரிசையில் ரஷீத் கான், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் இம்பாக்ட் ப்ளேயராக மோஹித் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த அணியைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சென்னை அணியின் டுவெய்ன் பிரிட்டோரியஸ் ”எங்கள் அணியில் இருந்து ஒரே ஒரு நபர் மட்டுமே சிறந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் இது ஒரு அணியின் கடின உழைப்பு என்பது நமக்குத் தெரியும்” என நக்கலாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சற்று முன்