- Advertisement -
Homeவிளையாட்டுENG vs BAN : 10 ரன் கூட தாண்டாத 7 பேர்... 24.1...

ENG vs BAN : 10 ரன் கூட தாண்டாத 7 பேர்… 24.1 ஓவரிலேயே முடித்து காட்டிய இங்கிலாந்து… தடுமாறி நின்ற பங்களாதேஷ்.. நடந்தது என்ன?

- Advertisement-

உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் நேற்று இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்த போட்டியில் மழை குறிக்கின்றதால் போட்டி 37 ஓவர்களாக சுருக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் ஆடிய பங்களாதேஷ் அணியின் ஓப்பனிங் வீரரான தன்சித் ஹசன் சிறப்பான ஒரு துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரரான லிட்டன் தாஸ் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் சாண்டோ இரண்டு ரன்கள் வெளியேற அடுத்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் தன்சித் ஹசனோடு சேர்ந்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார்.

தன்சித் ஹசன் 44 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, மெஹிதி ஹசன் 89 பந்துகளில் 77 ரன்கள் விலாசினார். ஆனால் அந்த அணியில் அடுத்தடுத்து வந்து வீரர்கள் யாரும் பெரிதாக ரண்களை எடுக்கவில்லை. அதன் காரணமாக 37 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது பங்களாதேஷ் அணி.

பங்களாதேஷ் அணி பொருத்தவரை ஏழு வீரர்கள் 10 ரன்கள் கூட தாண்டவில்லை. எனினும் தன்சித் ஹசன் மற்றும் மெஹிதி ஹசனின் சிறப்பான ஆட்டம் காரணமாகவே அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

இதனை தொடர்ந்து பேட்டிங் ஆட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான ஒரு துவக்கத்தை கொடுத்தார். எனினும் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டேவிட் மாலன் நான்கு ரன்களில் வெளியேற, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.

அடுத்தடுத்து வந்த வீரர்களான ஹாரி புரூக் 17, ஜோஸ் பட்லர் 30, லியாம் லிவிங்ஸ்டோன் 7 ரன்கள் என ஆட்டம் இழக்க, அடுத்து வந்த வீரரான மொயின் அலி சிறப்பாக விளையாடினார். அவர் 39 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் காரணமாக 24.1 ஓவர்களிலேயே இங்கிலாந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை அடித்து இந்த போட்டியில் மகத்தான வெற்றியை பெற்றது.

சற்று முன்