- Advertisement 3-
Homeவிளையாட்டுENG vs NZ : 13 ரன் கூட தாண்டாத 8 வீரர்கள்.. ஆனால் அணியின்...

ENG vs NZ : 13 ரன் கூட தாண்டாத 8 வீரர்கள்.. ஆனால் அணியின் ஸ்கோர் 368… முக்கிய கட்டத்தில் அணியை தாங்கி பிடித்த முன்னணி வீரர்.. நடந்தது என்ன?

- Advertisement 1-

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அங்கு நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளை நியூஸிலாந்து அணி அபாரமாக வென்று முன்னிலை பெற்று வந்த நிலையில், அதிகப்படியான முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது போட்டியில் நேற்று ஓவல் நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நிச்சயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடியது என்றே கூற வேண்டும். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் பூஜ்ஜியம் ரன்களோடு வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் மாலன் 95 பந்துகளில் 96 ரன்கள் அடித்து சிறப்பான ஒரு துவக்கத்தை கொடுத்தார்.

எனினும் அடுத்து வந்த வீரரான ஜோ ரூட் 4 ரன்கள் வெளியேற நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாட வந்த பென் ஸ்டோக்ஸ் தனது திறமையை இந்த போட்டியின் மூலம் மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளார். அவர் இதில் 124 பந்துகளில் 182 ரன்கள் அடித்து இங்கிலாந்தின் ஸ்கோரை படு வேகமாக உயர்த்தினார்.

அதே சமயம் அந்த அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான ஜோஸ் பட்லர் 38 ரன்களில் வெளியேற அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களோடு வெளியேறினர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களை முழுமையாக விளையாட முடியாமல் போனது. அந்த அணி 48.9 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 368 ரண்களை குவித்தது.

- Advertisement 2-

நியூஸிலாந்து அணியின் பவுலிங்கை பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். பென் லிஸ்டர் 3 விக்கெட்டுகளும், லாக்கி பெர்குசன் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

இந்த மெகா இலக்கை எட்டும் எண்ணத்தோடு பேட்டிங் ஆட வந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்களான டெவோன் கான்வே 9 ரன்களிலும், வில் யங் 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். அதே சமயம் அடுத்தடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல் என எல்லோரும் சொற்பரன்களில் வெளியேறினர்.

க்ளென் பிலிப்ஸ் மட்டும் 76 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்து ரச்சின் ரவீந்திரன் 22 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் யாருமே பெரிய அளவில் ரண் அடிக்கவில்லை. இதன் விளைவாக 39 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 187 ரன்களை மட்டுமே நியூசிலாந்து அணி அடித்தது.

இங்கிலாந்து அணியின் பவுலிங்கை பொறுத்தவரை கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ரீஸ் டோப்லி 2 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் மற்றும் மொயின் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வென்றிருந்தாலும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதன் காரணமாக அடுத்து நடக்க உள்ள போட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருக்கும்.

சற்று முன்