- Advertisement 3-
Homeவிளையாட்டுENG vs NZ : 2 பேர்.. 36.2 ஓவர்.. 125+ SR.. மேட்ச்...

ENG vs NZ : 2 பேர்.. 36.2 ஓவர்.. 125+ SR.. மேட்ச் கிளோஸ்… பட்டையை கிளப்பிய நியூஸிலாந்து… பரிதாபமான இங்கிலாந்து.. நடந்தது என்ன?

- Advertisement-

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி இன்று துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியினர் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது அந்த அணி வெகு எளிதாக 300 ரன்களை கடக்கும் என்றே பலரும் நினைத்து இருப்பார்கள்.

- Advertisements -

ஆனால் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்ட இங்கிலாந்து அணியினர் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 282 ரன்களை மட்டுமே குவித்தனர். இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்களையும், ஜாஸ் பட்லர் 43 ரன்களையும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், சாண்ட்னர் மற்றும் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய நியூசிலாந்து அணியானது 2 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே அணியின் எண்ணிக்கை 10 ரன்களில் இருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் அதன்பிறகு துவக்க வீரர் டேவான் கன்வேவுடன் கைகோர்த்த ரச்சின் ரவீந்திரா அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement-

இருவரும் இணைந்து தங்களது உலகக்கோப்பை அறிமுகப்போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினர். அதோடு மட்டும் நிற்காமல் முதல் ஓவருக்கு பிறகு எந்த ஒரு வாய்ப்பையும் இங்கிலாந்து அணிக்கு வழங்காமல் இறுதிவரை களத்தில் இருந்து போட்டியை முடித்துக் கொடுத்தனர். அந்த வகையில் 36.2 ஓவர்களை சந்தித்த நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதோடு 280-க்கும் மேற்பட்ட ரன்களை 14 ஓவர்கள் மிச்சம் வைத்து இவர்கள் பெற்ற இந்த வெற்றி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான டேவான் கான்வே 121 பந்துகளை சந்தித்து 19 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 152 ரன்களையும் (SR 125.62), மூன்றாவது வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 123 ரன்களையும் (SR 128.13) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று நியூசிலாந்து அணியை அற்புதமான வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்