- Advertisement 3-
Homeவிளையாட்டுகட்டம் கட்டி இந்திய அணிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து.. 4 ஆம் நாளிலேயே கதையை முடித்த...

கட்டம் கட்டி இந்திய அணிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து.. 4 ஆம் நாளிலேயே கதையை முடித்த பென் ஸ்டோக்ஸ்!

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதியில் யாருமே எதிர்பாராத முடிவு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முதல் இன்னிங்சில் அதிரடி ஆட்டத்துடன் பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, போக போக இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து தங்களின் முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய அணி மிக அற்புதமாக பேட்டிங் செய்து 436 ரன்கள் சேர்த்திருந்தது.

இதனால் 190 ரன்கள் வரை முன்னிலை பெற்ற இந்திய அணி மிகவும் எளிதாக வெற்றி பெற்று விடும் என்று தான் பலரும் கருதினர். ஆனால், இதற்கு நேர்மாறான விஷயங்கள் தான் போட்டியின் மூன்றாவது நாள் முதல் நடந்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப், 196 ரன்கள் குறித்து சரித்திரம் படைத்தார்.

அவருடன் இறுதிக்கட்டத்தில் டாம் ஹார்ட்லி, போக்ஸ் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் பங்களிப்பை கொடுக்க, இரண்டாவது இன்னிங்சில் அதுவும் இந்திய மண்ணில் அவர்களின் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு 420 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்ததால், நான்காவது நாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

ஆனால், இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அவுட்டான பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து கொண்டே வந்தது. இந்திய அணி வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்க தவற இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி தங்கள் அணியின் வெற்றி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்தார். அப்படி இருந்தும் ஒரு கட்டத்தில், அஸ்வின் மற்றும் பரத் ஆகியோர் இணைந்து ஓரளவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப்பை இந்திய அணிக்காக அமைத்திருந்தனர்.

- Advertisement 2-

ஆனாலும் பரத் மற்றும் அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாக கடைசி விக்கெட்டிற்கு 54 ரன்கள் தேவை என்ற சூழலில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் ஆடி வந்தனர். அவர்களால் மேற்கொண்டு 12 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால் 202 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. இங்கிலாந்து அணிக்காக டாம் ஹார்ட்லி 7 விக்கெட்கள் எடுத்தார்.

இதனால், இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்று, முதல் இரண்டு நாளில் தங்கள் மீது எழுந்த விமர்சனங்கள் அனைத்திற்குமே பதிலடி கொடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் மோசமாக ஆடிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் ஒல்லி போப் மற்றும் டாம் ஹார்ட்லி உதவியுடன் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரிலும் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சற்று முன்