- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரு ஓவருக்கு 21 ரன் வேணும்.. பந்துக்கு பந்து நடந்த மேஜிக்.. விருந்து படைத்த வீரர்.....

ஒரு ஓவருக்கு 21 ரன் வேணும்.. பந்துக்கு பந்து நடந்த மேஜிக்.. விருந்து படைத்த வீரர்.. அப்போ ஐபிஎல் ஏலத்துல சம்பவம் இருக்கு..

- Advertisement 1-

உலக கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் அதிர்ச்சி அளித்திருந்த இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி, இங்கிலாந்து அணிக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் இரண்டு போட்டிகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன், 45 பந்துகளில் 6 ஃபோர்கள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் அடித்தார்.

மற்ற வீரர்களும் சிறந்த பங்களிப்பை அளிக்க, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு சற்று கடினமான இலக்கு என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரைக் கைப்பற்றவும் வாய்ப்பாக இருந்தது.

இதனிடையே, கடின இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் வந்த வில் ஜேக்ஸ் ஏமாற்றமளிக்க, லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே, தொடக்க வீரர் பிலிப் சால்ட் சதமடித்தும் அசத்தினார்.

- Advertisement 2-

இதற்கு மத்தியில், கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இந்த ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரசல் வீச, பேட்டிங்கில் ஹேரி புரூக் இருந்தார். முதல் பந்தில் ஃபோர் அடித்த புரூக், அடுத்த நான்கு பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் ஐந்தே பந்தில் 21 ரன்னை அடித்து அசத்தி, தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விட்டு கொடுக்காமல் இங்கிலாந்து அணி தக்க வைக்கவும் உதவி செய்தார்.

7 பந்துகளில் 31 ரன்கள் அடித்த ஹேரி புரூக் மீது தற்போது ஐபிஎல் ரசிகர்கள் பார்வை அதிகம் திரும்பி உள்ளது. இன்னும் இரண்டே நாட்களில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள சூழலில் ஹேரி புரூக் பெயரும் இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளது. தற்போது அவரது டி 20 ஆட்டத்தின் தாக்கம், நிச்சயம் ஏலத்தில் அவருக்கான சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் என்றே தெரிகிறது.

சற்று முன்