- Advertisement -
Homeவிளையாட்டு3 தடவ சிஎஸ்கே பிளே ஆப் முன்னேறாம போனதுக்கு.. அந்த ஒரு இங்கிலாந்து பிளேயர் தான்...

3 தடவ சிஎஸ்கே பிளே ஆப் முன்னேறாம போனதுக்கு.. அந்த ஒரு இங்கிலாந்து பிளேயர் தான் காரணமா..

- Advertisement-

ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே மிகத் தொடர்ச்சியாக பிளே ஆப் முன்னேறிய அணி என்ற பெருமை சிஎஸ்கேவுக்கு மட்டுமே சொந்தமான ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் சீசனில் இறுதி போட்டிக்கு முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதனைத் தொடர்ந்து நடந்த போட்டிகளில் கூட தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக 2020 ஆம் ஆண்டில் தான் பிளே ஆப் வாய்ப்பையும் இழந்திருந்தனர். ஏறக்குறைய 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக வேற எந்த அணிகளாலும் முடியாத விஷயத்தை செய்து வந்த சிஎஸ்கே அணி, 13 வது சீசனில் ப்ளே ஆஃப் முன்னேறும் வாய்ப்பை முதல் முறையாக கோட்டை விட்டிருந்தனர்.

ஆனால் அதே வேளையில் இதனை தொடர்ந்து நடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை அவர்கள் கைப்பற்றி மிகப்பெரிய கம்பேக்கையும் கொடுத்திருந்தனர். ஆனால் மீண்டும் 2022 ஆம் ஆண்டு மிக மோசமாக ஆடி இரண்டாவது முறையாக பிளே ஆப் வாய்ப்பை தவற விட்டிருந்த சிஎஸ்கே அணி, 2024 ஆம் ஆண்டில் தற்போதும் நூலிழையில் கோட்டை விட்டிருந்தது.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறாமல் போனாலும் கூட குறிப்பிட்ட ரன்னை எட்டி இருந்தால் நிச்சயம் அவர்கள் பிளே ஆப்பிற்கு முன்னேறி இருக்கலாம். ஆனால் சிஎஸ்கே அணி பத்து ரன்கள் குறைவாக எடுத்ததால் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி பிளே ஆப்பிற்கு முன்னேற்றம் கண்டது.

- Advertisement-

இப்படியும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மூன்றே முறைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆப் வீட்டுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. மற்ற 14 முறை பிளே ஆப் தகுதி பெற்ற சென்னை அணி அதில் பத்து முறை இறுதிப்போட்டியில் ஆடி உள்ளதுடன் 5 முறை ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றியுள்ளது.

இப்படி ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் கலக்கி வந்தாலும் இந்த மூன்று சீசனில் அவர்கள் பிளே ஆப் முன்னேறாமல் போனது நிச்சயம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஏங்க வைத்திருந்தது. அப்படி இருக்கையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் முன்னேறாமல் போன இந்த மூன்று சீசன்களிலும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமையை தற்போது பார்க்கலாம்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், அந்த சீசனில் ஒரு போட்டி கூட ஆடாமல் வெளியேறி இருந்தார். அதே போல 2022 ஆம் ஆண்டு குஜராத் அணியில் இடம்பிடித்த ஜேசன் ராய், மீண்டும் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடப்பு சீசனில் கொல்கத்தாவில் இடம் பெற்ற ஜேசன் ராய், தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஐபிஎல் தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக பிலிப் சாட் கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்தார். இப்படி ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மூன்று சீசன்களில் தான் சென்னை அணி இதுவரை பிளே ஆப்பிற்கு முன்னேறவில்லை என்ற ஒற்றுமை பலரையும் வியக்க வைத்துள்ளது.

சற்று முன்