Homeகிரிக்கெட்கோலி இதை செய்தார்... பிடிவாதம் ஜாஸ்தி... மனநிலையில் கவனமாக இருக்கிறோம்... வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா...

கோலி இதை செய்தார்… பிடிவாதம் ஜாஸ்தி… மனநிலையில் கவனமாக இருக்கிறோம்… வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேச்சு

-Advertisement-

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் இரு அணிகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் போட்டியில் வெற்றிபெற்றதால், இந்திய அணி 1-0 என்ற தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தப் போட்டியின் நாயகனாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தப் போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, ஒவ்வொரு வெற்றியும் வித்தியாசமானது. வெஸ்ட் இண்டீஸில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது. இந்த தொடரின் முடிவு மகிழ்ச்சியாக இருக்கிறது. 2வது போட்டியில் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆனால் 5வது நாள் ஆட்டம் நடக்கவில்லை. கடைசி நாளின் முடிவை மழை நிர்ணயித்துவிட்டது.

எங்களால் வெற்றிபெற முடியும் நம்பிக்கையுடன் இருந்தோம். முதல் இன்னிங்ஸில் அப்படியான இலக்கை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்துவிட்டோம். சிராஜை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் தனது பந்துவீச்சில் மிகப்பெரிய அடியை இந்தத் தொடரில் எடுத்து வைத்திருக்கிறார். இந்திய வேகப்பந்துவீச்சுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.

-Advertisement-

என்னை பொறுத்தவரை அவரவர் பந்துவீச்சுக்கு அவர்கள் தான் தலைமை. பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலைமை தாங்குவதாகவே பார்க்கிறேன். இஷான் கிஷனை பொறுத்தவரை ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்கக் கூடியவர். அதனால் தான் 4வது இடத்தில் களமிறக்கினோம். எந்த பயமுமின்றி சிறப்பாக ஆடினார். இதுபோன்ற ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் ஒருவர் நின்று நிதானமாக தாங்கி பிடிக்க வேண்டும்.

விராட் கோலி அதனை மீண்டும் செய்திருக்கிறார். என்னை பொறுத்தவரை ஒரு அணியில் அனைத்து வகையான வீரர்களும் இருக்க வேண்டும். டெப்த், வெரைட்டி என்று இந்திய அணி சரியான இடத்தில் உள்ளது. ஒரு அணியாக நாங்கள் முன்னேறிக் கொண்டே வருகிறோம். அதேபோல் எங்களின் கிரிக்கெட் முன்பை விட தொடர்ந்து சீராக மாறி இருக்கிறது. தோல்விகளை பெற மாட்டோம் என்று பிடிவாதமாக விளையாடுகிறோம்.

-Advertisement-

ஒரு அணியாக எங்களின் கவனம் மூன்று விஷயங்களில் உள்ளது. ஒரு நல்ல ஃபீல்டிங் யூனிட்டாக இருக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சாளர்கள் அதிக பிரஷரில் இருக்கும் போது எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல் பேட்ஸ்மேன்கள் சவாலான நேரங்களில் என்ன மனநிலையில் விளையாடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்கிறோம். இந்த தொடரில் அனைத்தும் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்