- Advertisement -
Homeவிளையாட்டு1, 2, 3... பௌண்டரி லைனிற்கு வெளியே கேட்ச்... ஆனாலும் அவுட்... இந்த வருடத்தின் பெஸ்ட்...

1, 2, 3… பௌண்டரி லைனிற்கு வெளியே கேட்ச்… ஆனாலும் அவுட்… இந்த வருடத்தின் பெஸ்ட் கேட்ச் இது தான்பா…

- Advertisement-

“தி ஹண்ட்ரட்” என்ற 100 பந்துகளை கொண்ட போட்டித் தொடர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் எட்டு அணிகளும் பங்கேற்கிறது.

இந்தப் போட்டித் தொடரின் 30 ஆவது ஆட்டத்தில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியும் வெல்ஸ் ஃபயர் அணியும் லீட்ஸ் நகரத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ் 100 பந்துகளில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 158 என்ற ரன்களை குவித்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆடம் லித் 2 ரன்களிலும் , மாத்தியோ ஷார்ட் பூஜ்ஜியத்திலும் அவுட் ஆகினர்.

பின்பு வந்த டாம் பேண்டானும் டக் அவுட் ஆகி வந்த வழியே மீண்டும் நடையை கட்டினார். அதன்பின் களம் இறங்கிய ஆடம் ஹோஸ் 15 ரன் இருக்கையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் நான்கு வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, பின்பு களமிறங்கிய ஹாரி ப்ரூக் ருத்ர தாண்டவம் ஆடினார் . அவர் 42 பந்துகளில் 105 ரன்கள் குவித்து தனது அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

பின்பு களமிறங்கிய வெல்ஸ் ஃபயர் அணிக்கு 100 பந்துகளில் 159 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்டீபன் எஸ்கினசியும் , ஜானி பே ர்ஸ்டோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்டீபன் எஸ்கினசி 28 பந்துகளில் 58 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 39 பந்துகளில் 44 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement-

பின்பு களம் இறங்கிய ஜோ கிளார்க் 44 ரன்களும், லூக் வெல்ஸ் 6 ரன்கள் குவித்து வெல்ஷ் பயர் அணியின் வெற்றிக்கு உதவினர். இந்தப் போட்டியில் ஜானி ப்ரூக்கின் அதிவேக சதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் இந்த போட்டியில் இதேபோன்று வேறொரு திரில்லிங்கான சம்பவமும் நடைபெற்றுள்ளது, வேல்ஸ் பெயர் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்த கேட்ச் தான் அது.

ஜானி பார்ஸ்டோவ் கார்ஸ் வீசிய பந்தை பவுண்டரிக்கு வெளியே அடித்து அதை சிக்ஸராக்க நினைத்தார். ஆனால் பவுண்டரி கோட்டின் அருகே நின்ற வெஸ்டர்ன் ஃபயர் வீரர் உயரமாக ஜம்ப் செய்து பந்தை இரண்டு மூன்று முறை தட்டுத்தடுமாறி பிடித்து அதை தனது அருகில் நின்ற சக வீரரிடம் தள்ளிவிட்டார். அதை ஹோஸ் லாவகமாக பிடித்துக் கொண்டார். தற்போது அந்த கேட்ச் ஆனது வைரலாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது

சற்று முன்