நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் வரை விளையாடிய பேட்ஸ்மேன்களில் அதிக ரன்களை அடித்து ஆரஞ்ச் கேப்பை கைவசம் வைத்திருந்தவர் பெங்களூர் அணியின் கேப்டன் பாஃப் டூபிளஸ்சிதான். இந்த தொடரில் அவர் மொத்தம் 730 ரன்களை 14 ஆட்டங்களில் அடித்திருந்தார்.
2011 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு அவர் தலைமையில் ப்ளே ஆஃப்க்கு சென்ற அணி, இந்த ஆண்டு நூலிழையில் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் குஜராத் அணியிடம் தோற்றதால் அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் டு பிளஸ்சி தான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியது பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் சென்னை அணியில் இருந்த போது தன் செல்ல மகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது, அந்த அணியின் மருத்துவக்குழு எப்படி பார்த்துக் கொண்டார்கள் என்பதை பற்றியும் எழுதியுள்ளார்.
அவரது புத்தகத்தில் “சிஎஸ்கே அணிக்காக 2021 ஆம் ஆண்டு விளையாடியது மிக முக்கியமானதாக என்னுடைய கேரியரில் அமைந்தது. அந்த ஆண்டுதான் என்னுடைய மகள் முதல் முதலாக காலடி எடுத்துவைத்து நடக்க ஆரம்பித்தார். அது நான் சென்னை அணியோடு இருந்த ஹோட்டலில் நடந்தது.
அதை ஒட்டுமொத்த அணியும் என்னை போலவே மகிழ்ச்சியோடு கொண்டாடியது. அடுத்த வருடம் மீண்டும் வந்தபோது என் குழந்தைக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது. அப்போது நான் குழந்தையோடு மருத்துவமனையில் இருந்தேன். சிஎஸ்கே அணியின் மருத்துவர்கள் குழு என் குழந்தையை குணமாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்கள்.
Faf Du plessis shared a heart warming message for CSK!! 🥺💛 pic.twitter.com/TpgX3XL8MQ
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) May 22, 2023
அப்போது ஒரு போட்டியில் என்னால் சரியான நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அதைப் பற்றி அணி நிர்வாகத்தினர் என்னிடம் கோபித்துக் கொள்ளவில்லை. என் குழந்தையின் நலம் பற்றியே விசாரிப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு அணிதான் சிஎஸ்கே. சிஎஸ்கே வில் இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் அனுபவித்து மகிழ்ச்சியாக இருந்ததாக உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.