- Advertisement -
Homeவிளையாட்டுதோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக சிறந்த விஷயம் இது தான். இப்போது நானும் அதை...

தோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிக சிறந்த விஷயம் இது தான். இப்போது நானும் அதை செயல்படுத்த துவங்கிவிட்டேன் – டு பிளஸ்சி கருத்து

- Advertisement-

பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியதை அடுத்து இப்போது இரண்டு ஆண்டுகளாக அணியை வழிநடத்தி வருகிறார் தென் ஆப்பிரிக்கா வீரரான பாஃப் டு பிளஸ்சி. கடந்த முறை அவர் தலைமையில் அணி ப்ளே ஆஃப் சென்றது. இந்த முறை ப்ளே ஆஃப்க்கான போட்டியில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியும்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் டு பிளஸ்சி. பெங்களூர் அணிக்கு வருவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தலைமையில் சில சீசன்கள் விளையாடியுள்ளார் ஃபாஃப். இப்போது தன்னுடைய கேப்டன்சி அனுகுமுறையில் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டவை பற்றி அவர் பேசியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது அமைதிதான். அவர் கேப்டன் பொறுப்பில்  எவ்வளவு அமைதியாக இருக்கிறோரோ அதையே நான், எனது கேப்டன்சியிலும் பின் தொடர்கிறேன் என நினைக்கிறேன். நான் எப்போதும் எனது வீரர்களிடம் இருந்து என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

தோனியிடம் இருந்து நான் பெரிதாக எடுத்துக் கொண்டது இதுவாக இருக்கும் என நினைக்கிறேன். தோனி சில காரணங்களுகாக கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார். தோனியை விட கூலாக இருப்பதைக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.

- Advertisement-

நான் தொலைவில் இருந்து தோனியைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் ஏன் இவ்வளவு வெற்றி பெற்றவராக இருக்கிறார், அவரை இவ்வளவு வெற்றிகரமாக ஆக்கியது எது என நினைப்பேன். எந்த நிலையிலும் அவர், உலகின் மிக வெற்றிகரமான சர்வதேச மற்றும் உள்நாட்டு கேப்டன்களில் ஒருவர்.

இதையும் படிக்கலாமே: தோனியின் பந்து வீச்சில் அவுட் ஆன முதல் ஆள் நானா? வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட கெவின் பீட்டர்சன்

தோனி, விராட், கிரேம் ஸ்மித் அல்லது ஸ்டீபன் ஃப்ளெமிங்கைப் போல என்னால் ஒருபோதும் கேப்டனாக இருக்க முடியாது. நான் என்னுடைய சொந்த அனுகுமுறையில் சொந்த வழியில் கேப்டனாக செயல்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்