- Advertisement -
Homeவிளையாட்டுநானும் கோலியும், பேட்டிங் செய்யும்போது என்னவெல்லாம் பேசிக்கொண்டோம் - பேட்டியில் வெளிப்படையாக சொன்ன டு பிளசிஸ்

நானும் கோலியும், பேட்டிங் செய்யும்போது என்னவெல்லாம் பேசிக்கொண்டோம் – பேட்டியில் வெளிப்படையாக சொன்ன டு பிளசிஸ்

- Advertisement-

நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை அபாரமாக விளையாடி சேஸ் செய்துள்ளது பெங்களூர் அணி. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான கோலியும், டு பிளஸ்சியும் விக்கெட் இழக்காமல் 172 ரன்கள் சேர்த்தது வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தது. இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பவுலர்கள் திணறினர்.

நிதானமாக ஆரம்பித்து 35 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி, அடுத்த 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதமடித்தார். ஐபிஎல் போட்டிகளில் கோலி, அடிக்கும் 6 ஆவது சதம் இதுவாகும். சதமடித்த அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்ற கோலி, எல்லைக் கோட்டிற்கு அருகே கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். அதே போல மறுமுனையில் டு பிளஸ்சி சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இந்த சீசனில் மட்டும் 800 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் டு பிளஸ்சி, கோலியுடனான தன்னுடைய பார்டன்ர்ஷிப் குறித்து பேசியுள்ளார். அதில் ”அற்புதமான சேஸ். கிளாசன் அதிரடியாக ரன்கள் சேர்த்தாலும் அது ஒரு நல்ல விக்கெட்டாக இருந்தது. இந்த விக்கெட்டில் 200 ரன்கள் கூட சேஸ் செய்யும் ஸ்கோர் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம்.

பந்துகள் பெரிய அளவில் சுழலவில்லை. எனவே நாங்கள் நேர்மறையாக விளையாட விரும்பினோம். இந்த போட்டியில் எங்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இது நிச்சயம் தொடரும். கோலியும் நானும் ஒருவரையொருவர் காம்ப்ளிமெண்ட் செய்கிறோம். நாங்கள் பேட் செய்யும் போது இன்றைய திட்டம் என்ன? யாரை டார்கெட் செய்து அடித்து ஆடலாம்? என பேசிக் கொள்வோம்.

- Advertisement-

இதையும் படிக்கலாமே: பெங்களூரு அணி பெற்ற வெற்றியால் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சென்னை, லக்னோ – முழு விவரம்

மேலும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் பந்துகளை அடிக்கிறோம். இதனால் எங்களுக்கு பந்துவீசுவது கடினமானதுதான். நாங்கள் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்த நண்பர்கள். இந்த வெற்றி தருணத்தை அப்படியே எங்களின் கடைசி போட்டிக்காக சின்னசாமி ஸ்டேடியத்துக்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்.” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்