- Advertisement -
Homeவிளையாட்டுகோலி நம்பமுடியாத அளவுக்கு ஒரு இன்னிங்சை விளையாடினார். ஆனால் தினேஷ் கார்த்திக்? தோல்விக்கு காரணம் என்ன?...

கோலி நம்பமுடியாத அளவுக்கு ஒரு இன்னிங்சை விளையாடினார். ஆனால் தினேஷ் கார்த்திக்? தோல்விக்கு காரணம் என்ன? – ஃபாஃப் டு பிளஸ்சி வேதனை

- Advertisement-

ப்ளே ஆஃப் சுற்றுக்கு RCB தகுதி பெறுமா? அல்லது மும்பை செல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்போடு நேற்றைய போட்டிகள் துவங்கின. முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற, மழை காரணமாக இரண்டாவது போட்டி தாமதமாக துவங்கப்பட்டது. அதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி கோலியின் அபாரமான சதத்தின் உதவியுடன் 197 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய குஜராத் அணியில் அந்த அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 51 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் அணியை வெற்றிப் பெற வைத்தார். இதன் மூலம் பெங்களூர் அணியின் ப்ளே ஆஃப் கனவு தகர்ந்தது.

தோல்விக்குப் பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் பாஃப் டு பிளஸ்சி “மிகவும் ஏமாற்றமாக உள்ளது. இன்று நாங்கள் மிகவும் வலுவான அணியாக விளையாடினோம், இரண்டாவது இன்னிங்ஸில் மைதானம் மிகவும் ஈரமாக இருந்தது. முதல் இன்னிங்ஸிலும் ஈரமாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகமான பந்தில் க்ரிப் இல்லை. மேலும் இரண்டாவது இன்னிங்ஸின் போது நாங்கள் பல முறை பந்தை மாற்ற வேண்டியிருந்தது.

விராட் கோலி நம்பமுடியாத அளவுக்கு ஒரு இன்னிங்ஸை விளையாடி எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். ஆனால் சுப்மன் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பான இன்னிங்ஸை விளையாடி எங்களிடமிருந்து ஆட்டத்தை பறித்தார். எங்கள் அணியில் பேட்டிங் கண்ணோட்டத்தில், முதல் 4 பேர் நன்றாக பங்களித்தனர்.

- Advertisement-

சீசன் முழுவதும் மிடில் ஆர்டரில் இருந்து ரன்கள் வரவில்லை. குறிப்பாக பின் வரிசை பேட்டிங் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் மிடில் ஓவர்களில் நாங்கள் விரும்பிய அளவுக்கு விக்கெட்டுகளைப் பெறவில்லை. கோலி இந்த சீசன் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினார். மேலும் ஒரு தொடக்க பார்ட்னர்ஷிப்பாக நாங்கள் 40 ரன்களுக்குக் குறைவாக எந்த ஒரு போட்டியிலும் அவுட் ஆகவில்லை.

இதையும் படிக்கலாமே: மீண்டும் சி.எஸ்.கே-வுடன் முட்டிகிச்சா? ஜடேஜாவின் ட்வீட்டால் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சை

பின் வரிசை பேட்டிங்கில் போட்டிகளை முடிப்பதில் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும். கடந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி பல போட்டிகளை எங்களுக்கு சிறப்பாக முடித்துக் கொடுத்தார்.  ஆனால் இந்த சீசனில் அவரிடம் இருந்து அது வெளிப்படவில்லை. நீங்கள் வெற்றிபெறும் அணிகளைப் பார்த்தால், அவர்கள் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்டிங்கில் சில நல்ல ஹிட்டர்களைக் கொண்டுள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்